இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவர் மரணம்

சென்னை,

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ) முன்னாள் தலைவர் என்.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. விளை யாட்டு நிர்வாக அமைப்பில் நீண்ட காலமாக பணியாற்றிய ராமச்சந்திரன் 2014 முதல் 2017-ம் ஆண்டு வரை ஐ.ஓ.ஏ தலைவராகவும், 2008 முதல் 2016 வரை உலக ஸ்குவாஷ் சம்மேளன தலைவராகவும் இருந்துள்ளார்.

இவர், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் என்.சீனிவாச னின் சகோதரர் ஆவார்.

Source link