தமிழகத்தில் ஏப்.24 வரை லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஏப்.24-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிழக்கு உத்தரப் பிரதேசம் முதல் மன்னார் வளைகுடா வரை கிழக்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, தெலங்கானா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக சுமார் 900 மீட்டர் உயரத்தில், ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை முதல் 22-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

Source link