பொன்னேரியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பரப்புரையில் ஈடுப்பட்டார்.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ராகுல் காந்தி பொன்னேரி பிரச்சாரம்
இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இப்போது பேசிய அவர் தமிழ்நாட்டை தமிழ் மொழியை கலாச்சாரத்தை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தாக்கும்போது என்னை தமிழனாகவே உணர்கிறேன் என்று கூறினார். தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல தமிழ் மொழியின் மீதும் எனக்கு அன்பு அதிகரித்துக் கொண்டு செல்கிறது. வரும் தேர்தலில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கூட்டாளிகள் தமிழ் மண்ணில் நுழைய முடியாதபடி செய்ய வேண்டும்.
திமுக கூட்டணி ஜெயித்தாலும்…திமுகக்கு ஆட்சிக்கு வராது! BJP Kalyanaraman interview
தமிழ் மண்ணில் பாஜக நுழையக்கூடாது
தமிழ்நாட்டு முதல்வர் தங்களுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என மோடி மற்றும் அமித்ஷா நினைக்கிறார்கள் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இணைந்து என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் . ராணுவ மூலம் போர் தொடுத்தனர் .இன்று ராணுவம் இல்லாமல் போரை நடத்துகிறது. பாஜக தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாற்று அழிக்க நினைக்கின்றனர்.
ராகுல் காந்தி அனல்பறக்க பேச்சு
நாங்கள் எப்போதும் அதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் தொகுதி மறுவறையை நேற்று கொண்டு வர முயன்றன நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைப்பது அவர்களின் திட்டமாக இருந்தது. அந்த எண்ணத்தை மசோதாவை தோற்கடித்தோம் அவர்களின் திட்டத்தையும் தோற்கடித்தோம் என்று ராகுல் காந்தி கூறினார்.
பெரியாரின் சிந்தனைகளை தத்துவங்களை தகர்க்க பாஜகவும் ஆர் எஸ் எஸ் உம் சதி செய்கிறது அவரின் சமூக நீதிக் கொள்கைகளை அழிக்க பார்க்கிறார்கள் முதலில் கொள்கைக்கான போர் பிறகு தான் அரசியல் என்று ராகுல் காந்தி கூறினார்.பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அதிமுக அழிந்துவிட்டது இப்போது இருப்பது வெறும் முகமூடி தான் அது பாஜகவின் உடையது என்று கூறினார்.
காங்கிரஸ் சார்பில் ராகுல் வெளியிட்ட தேர்தல் அறிக்கை
அமெரிக்க அதிபர் டிரம்பிடம் மோடி சரணடைந்தது போல், டெல்லியிடம் சரணடையும் முதலமைச்சர் பாஜகவுக்கு வேண்டும்மோடி, அமித்ஷா உத்தரவை செயல்படுத்தும் ஒருவரை தமிழ்நாட்டின் முதல்வராக்க பாஜக நினைக்கிறது என்று கூறினார்.
- ஒவ்வொரு மாதமும் மகளிருக்கு ரூ.2,000 வழங்கப்படும்
- முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.2,000 வழங்கப்படும்
- முதல்முறை சொத்து வாங்கும் பெண்களுக்கு இலவச பத்திர பதிவு செய்யப்படும் என்று கூறினார்.
