மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

எழுதியவர்: ஹரிகிருஷ்ணன் எஸ்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டி.ஏ) 3%  உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க:

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (டி.ஏ) 3% உயர்த்தவும், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை (டி.ஏ) அதற்கேற்ப உயர்த்தவும் மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உயர்வு 2026 ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 60%லிருந்து 63% உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் மூலம் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Source link