“என் பேத்திகளும் நன்றாக நடிப்பார்கள், பொய் பேசுவார்கள்…”
மருத்துவமனையில் என்னைப் பார்க்கவிடாமல் செய்துவிட்டார்களாம். அந்தப் பொய்யர்கள்தான், பச்சோந்திகள்தான் தற்போது என்னைப் பற்றியும், ஜி.கே.மணி அவர்களைப் பற்றியும் பேசுகிறார்கள். அன்புமணியின் குடும்பத்தினர் நடிப்புத் திறமையிலும், கூசாமல் பொய் பேசுவதிலும் திறன் மிக்கவர்கள்.
மூட்டை மூட்டையாக அன்புமணி பொய்யை அவிழ்த்து விடுகிறார். அவர்கள் கண்களில் கிளிசரின் வைத்து அழுது நடிப்பார்கள். எனது பேத்திகள் அழுவதைப் பார்த்து அனைவரும் என்னைச் குறை சொல்வார்கள்.
ஆனால் அது உண்மை கிடையாது. என் பேத்திகளும் நன்றாக நடிப்பார்கள், பொய் பேசுவார்கள். பொதுமக்களிடம் என்னை தவறாகச் சித்தரித்து குடும்பமாக நடித்து வருகிறார்கள். பா.ம.க-வை எப்படியாவது அபகரித்துவிட வேண்டும் என்று முனைப்பு காட்டி, அபகரித்தும் விட்டார்கள்.

அதற்காகக் குறுக்கு வழிகளை எல்லாம் செய்தார்கள். அதைவிட, என் இறப்பு எப்போது வரும் எனக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஜி.கே.மணியிடம் இருந்து திட்டமிட்டு கட்சியின் தலைவர் பதவியைப் பெற்றார்கள்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்திற்கும் கூட்டணி சின்னத்திற்கும் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்றார்.
அவரையடுத்துப் பேசிய பா.ம.க-வின் செயல் தலைவர் ஸ்ரீகாந்திமதி ராமதாஸ், “கட்சியின் செயல் தலைவராக நான் பேசவில்லை. ராமதாஸின் மகளாகப் பேசுகிறேன்.
அன்புமணிதான் முதல் துரோகி. அப்பாவின் கட்சி, சொத்து என அனைத்தையும் அவர் திருடிவிட்டார். எங்களுக்கு அரசியல் ஆசை இல்லை. மயங்கி விழுந்து மருத்துவமனைக்குச் சென்று வந்திருக்கும் அப்பாவை இதுவரை அன்புமணி வந்து பார்க்கவில்லை. அக்கா என்று கூட பார்க்காமல் என்னை கேவலமாகப் பேசுகிறார்கள்.
