ஊட்டி: மதுபானம், நிலம் ஒதுக்கீடு மற்றும் மணல் குவாரி ஒப்பந்தங்களில், ஸ்டாலின் குடும்பம் ஊழலில் ஈடுபட்டுள்ளது

ஊட்டி: மதுபானம், நிலம் ஒதுக்கீடு மற்றும் மணல் குவாரி ஒப்பந்தங்களில், ஸ்டாலின் குடும்பம் ஊழலில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றம்சாட்டி உள்ளார்.

ஊட்டியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இபிஎஸ் தலைமையிலான தேஜ கூட்டணி இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறும். இபிஎஸ் தலைமையில் தமிழகத்தில் மே 4 முதல் புதிய அரசு அமைந்து மக்களுக்கு சேவையாற்றும். மதுபானம், நிலம் ஒதுக்கீடு மற்றும் மணல் குவாரி ஒப்பந்தங்களில் ஸ்டாலின் குடும்பம் ஊழலில் ஈடுபட்டுள்ளது.

லஞ்சம் வாங்காமல் பணி நியமனம் மற்றும் பணியிட மாற்றம் செய்வது இல்லை. இதனை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழக மக்களுக்கு சேவை செய்ய தேஜ கூட்டணி ஒரே குடும்பமாக பணியாற்றி வருகிறது. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றத்தை தேஜ கூட்டணி கொண்டு வரும். இவ்வாறு பீயூஷ் கோயல் கூறினார்.

Source link