#BREAKING ஐபிஎல் 2026: பெங்களூருவை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ்!

இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 20-ல் பெங்களூருவும், 12-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவில்லை.

இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்ய அதனை தொடர்ந்து பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய டெல்லி அணி அதிரடியாக விளையாடி இறுதியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் டெல்லி அணி தனது 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Source link