பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்றிரவு 8.30 மணிக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
* மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோற்கடிகப்பட்டுள்ளது.
* நாட்டின் மகள்களின் கனவுகளை எதிர்க்கட்சிகள் சிதைத்துவிட்டனர்.
* இந்திய பெண்களின் முன்னேற்றம் தடுக்கப்பட்டுள்ளது.
* அனைத்து தாய்மார்கள், சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
* பெண்கள் தோற்றதை திமுக, காங்கிரஸ் கொண்டாடி வருகிறது. எதிர்க்கட்சிகளின் துரோகத்திற்கு ஒட்டுமொத்த நாடும் சாட்சி.
* சுயநல எதிர்க்கட்சிகள் பெண்கள் அதிகாரமளித்தலை தடுத்து நிறுத்தி உள்ளன. ஒட்டுமொத்த நாடும் சோகத்தில் இருப்பதை என்னால் உணர முடிகிறது.
* தேச நலனை விட அரசியலே எதிர்க்கட்சிகளுக்கு பெரிது.
* எதிர்க்கட்சியினருக்கு பெண்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
