புதுடில்லி: ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய நோக்கி வந்த இரண்டு கப்பல்களை நோக்கி ஈரான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்பட்டு உள்ளது. ஈரானின் இந்த அறிவிப்புக்கு பின் ஜலசந்தி நோக்கி சென்று கொண்டிருந்த20 கப்பல்கள் ஓமன் நோக்கி திருப்பி அனுப்பப்பட்டன.
இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் மற்றும் காஸ் நிரப்பிய கப்பல்கள் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தன. அதனை ஈரான் படைகள் தடுத்து நிறுத்தின. இதில் இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது.
அதில் ஒரு கப்பலில் ஜன்னல் சேதம் அடைந்தது. இதனால்,அந்த கப்பல் மீண்டும் திரும்பியது. மற்றொரு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தகவல் இல்லை. இருப்பினும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன் நிறுவனத்துக்காக கச்சா எண்ணெய் உடன் அந்த கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டுள்ளது.
எந்த வித எச்சரிக்கையும் விடுக்காமல் ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. மற்ற கப்பல்கள் ஓமன்அருகே சென்றுவிட்டன இவற்றில் ஏழு கப்பல்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டவை. 4 லைபீரியாவிலும், 2 மார்ஷல் தீவுகளிலும், ஒன்று வியட்நாமிலும் பதிவு செய்யப்பட்டவை. ஆறு கப்பல்களில் கச்சா எண்ணெயும், 3 கப்பல்களில் எல்பிஜியும், 4 கப்பல்களில் உரமும் நிரப்பப்பட்டு இருந்தன.
மத்திய அரசு கண்டனம்
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கொடியுடன் வந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான ஈரானின் துாதர் முகமது பதாலியை வரவழைத்து, நம் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
