வார ராசிபலன்

இந்த வார ராசிபலன் பிப்ரவரி 2 முதல் 8 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி.

மேஷம்:

மேஷராசி அன்பர்களே!

பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வீண் செலவுகளும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக அமையும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. இழுபறியாக இருந்த அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாக மாகவே காணப்படுவீர்கள். சக ஊழியர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள்.

வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும். பங்குதாரர்களின் ஆதரவு உற்சாகம் தரும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் சிறுசிறு சலனம் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சக பணியாளர்களால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 4,6

அதிர்ஷ்ட எண்கள்: 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுவாம்

ரிஷபம்:

ரிஷபராசி அன்பர்களே!

பணவரவு ஓரளவுக்குத்தான் இருக்கும். செலவுகளில் திட்டமிடுதல் அவசியம். சகோதர வகையில் இருந்து வந்த கருத்துவேறுபாடுகளும் கசப்பு உணர்வுகளும் மாறி, சுமுகமான உறவு ஏற்படும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் தேவையான உதவியும் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் தகுந்த முன்னெச்சரிக்கை அவசியம்.

வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் சலுகைகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். பங்குதாரர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு சற்று சிரமமான வாரம் என்றே சொல்ல வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 2,4

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை

பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் – பிறை முடித்த

ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கே – அன்பு முன்பு

செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

மிதுனம்:

மிதுனராசி அன்பர்களே!

பணவரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். கணவன் – மனை விக்கிடையே ஏற்பட்டிருந்த பிரச்னைகள் நீங்கி சுமுக உறவு ஏற்பட வாய்ப்புண்டு. உங்கள் தேவையறிந்து நண்பர்கள் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். பழைய கடன்களைத் தந்து முடிக்க வாய்ப்பு ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பயணத்தால் அனுகூலம் உண்டு.

அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும்.

வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு திருப்திகரமான வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு பணிச்சுமையின் காரணமாகச் சற்று சோர்வு ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 5,7

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6, 9

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஆலம்தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை அமரர் தொழுது ஏத்தும்

சீலம்தான் பெரிதும் உடையானைச் சிந்திப்பார் அவர் சிந்தை உளானை

ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

கால காலனைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே 

கடகம்:

கடகராசி அன்பர்களே!

குடும்பத்தில் கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப் படும். பணவரவைப் பொறுத்தவரை பிரச்னை எதுவும் இல்லை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவதில் சற்று அலைச்சல் ஏற்படும். சிலருக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் உங்கள் மீதான நிர்வாகத்தினரின் அலட்சியப் போக்கு மாறும். சக ஊழியர்கள் அனுசரணை யாக நடந்துகொள்வார்கள். பல வகைகளிலும் முன்னேற்றம் ஏற்படும்.

வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிவு உண்டாகக் கூடும் என்பதால் பொறுமை அவசியம். விற்பனையும் சுமாராகத்தான் இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் பொறுமையாக இருக்கவேண்டிய வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 3,8

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே

சிம்மம்:

சிம்மராசி அன்பர்களே!

பொருளாதார வசதி நல்லபடியே காணப்படுகிறது. கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் கடன் வாங்காமல் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை மிகவும் அவசியம். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் தீர்ந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் பிரசித்தி பெற்ற ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை சற்று இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். அதிகாரிகள் சில நேரங்களில் கண்டிப்பு காட்டினாலும், ஆதரவாகவும் இருப்பார்கள்.

வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள் வது அவசியம். மற்றபடி வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 3,7

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5

வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஆதிதேவம் நமஸ்துப்யம் ப்ரசீத மம பாஸ்கர

திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே

தம் சூர்யம் ஜகதாம் நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்

மஹாபாப ஹரம்தேவம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம்

கன்னி:

கன்னிராசி அன்பர்களே!

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் நீங்கி, குதூகலம் குடிகொள்ளும் குடும்பத்தில் உறவினர்களால் கணவன – மனைவிக்கிடையே சிறு சிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளை கள் உங்கள் எண்ணப்படி நடந்துகொள்வார்கள். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்து, மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர் ஒருவர் நீங்கள் கேட்ட உதவியை செய்து தருவார். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும்.

வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியின் காரணமாக சிலர் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு திடீர் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது. பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத் தும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 4,8

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 8

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

விநாயகனே வேட்கை தணி விப்பான்-விநாயகனே

விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்

கண்ணிற் பணிமின் கனிந்து

துலாம்:

துலாராசி அன்பர்களே!

உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பணவரவு உண்டு. சிலருக்கு வீண்செலவுகளும் ஏற் படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். நீண்டநாளாகச் செல்ல நினைத்த புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகள் வழியில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

வேலையில் இருப்பவர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்வதாக இருந்தால் நன்றாக யோசித்துச் செய்யவும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்காகப் பாடுபடுவீர்கள். அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 2,5

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்

உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா

வைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி – என்றே

செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே

விருச்சிகம்:

விருச்சிகராசி அன்பர்களே!

பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். சிலருக்குச் சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதித்தாலும் உடனே சரியாகிவிடும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தந்தையின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு பணியிடத்தில் மாற்றம் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி செய்வார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கடன் வாங்க நேரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக அமையும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 3,5

அதிர்ஷ்டம் தரும் எண்கள்:5, 7

வழிபடவேண்டிய தெய்வம்: லட்சுமி நரசிம்மர்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்,

அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, – குட்டத்துக்

கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்

தாள் முதலே நங்கட்குச் சார்வு

தனுசு:

தனுசுராசி அன்பர்களே!

குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் களைகட்டும். சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், போதுமான பணவரவு இருப்பதால் எளிதாகச் சமாளித்துவிடுவீர்கள். நீண்டநாளாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்ல இடத்தில் வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். அரசாங்கக் காரியங்களில் இழுபறியான நிலையே காணப்படும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். அதிகாரி களின் ஆதரவு உற்சாகம் தரும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பணியாளர்க ளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும்.

குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 5,8

அதிர்ஷ்டம் தரும் எண்கள்:1, 9

சந்திராஷ்டமம் : 2 இரவு வரை

வழிபடவேண்டிய தெய்வம்: அனுமன்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்

செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன்

வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும்

அஞ்சலென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே

மகரம்:

மகரராசி அன்பர்களே!

வருமானத்துக்குக் குறைவிருக்காது. உறவினர்கள் வருகை வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தி கிடைக் கும். சகோத ரர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் வீண் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

அலுவலகத்தில் கடுமையாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அலுவலகப்பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சிறிய தவறுகூட பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

வியாபாரத்தை விரிவுபடுத்தவும், சரக்குகளைக் கொள்முதல் செய்யவும் சிலருக்கு தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குத் தேவையான பணம் இருப்பதால் சிரமம் எதுவும் இருக் காது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 6,7

அதிர்ஷ்டம் தரும் எண்கள்:6, 9

சந்திராஷ்டமம் : 2 இரவு முதல் 3,4,5 காலை வரை

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்.

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!

வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில்

ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!

முருகா என்று ஓதுவார் முன்!

கும்பம்:

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் இழுபறியாக இருந்தாலும் சாதகமாக முடிந்துவிடும். நீண்டநாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வாரப் பிற்பகுதியில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வும். பணவரவு தேவையான அளவுக்கு இருக்கும்.

அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும் என்றாலும் அதனால் நன்மையே நடக்கும். அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

புதிதாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்களும், வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்களும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். சாதகமாக முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பணிகளைச் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 2,4

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,5

சந்திராஷ்டமம் : 5 காலை முதல் 6,7 மாலை வரை

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா! அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே

மீனம்:

மீனராசி அன்பர்களே!

குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பணவரவுக்குக் குறைவிருக்காது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் அனுகூ லம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பெண் அல்லது பிள்ளையின் திருமணம் தொடர்பான முயற்சி சாதகமாக முடியும்.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக் கும். மேலதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் பொறுமையைக் கடைப் பிடிப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 2,6

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7

சந்திராஷ்டமம் : 7 மாலை முதல் 8 முழுவதும்

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

இல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு

நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்

கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும்

செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

Source link