aadi pournami 2026 rules ஆடி பெளர்ணமி அன்று இந்த தவறுகளை மட்டும் தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்

ஆடி பெளர்ணமி என்று தெய்வீக ஆற்றல் அதிகரித்து காணப்படும் ஒரு சிறப்பான நாளாகும். இந்த நாளில் இறை வழிபாடும், சந்திர தரிசனமும் சிறப்பான பலன்களை தரும். விரதம் இருந்து சந்திர தரிசனம் செய்வதால் மன அமைதி கிடைக்கும். இந்த நாளில் செய்யப்படும் மந்திர ஜபம், என்ன நினைத்து மந்திரங்களை உச்சரிக்கிறோமோ அந்த காரியம் நிச்சயம் வெற்றி அடையும் என்பது ஐதீகம். அதே சமயம் ஆடி பெளர்ணமியில் சில விஷயங்களை கண்டிப்பாக செய்யாமல் தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான, சக்தி வாய்ந்த நாட்களில் ஒன்று ஆடிப் பெளர்ணமி. இது தெய்வீக ஆற்றல் அதிகம் நிறைந்த நாளாக கருதப்படுகிறது. ஆடி பெளர்ணமி அன்று சந்திர பகவான் தன்னுடைய முழு ஆற்றலுடன் இருக்கும் நாளாகும். இந்த நாளில் அம்மனின் அருளை பெற வழிபாடுகள், பூஜைகள் செய்வது சிறப்பு. ஆடிப் பெளர்ணமி அன்று சிவபெருமானையும், அம்பிகையையும், பெருமாளையும் மனதார வழிபடுவது சிறப்பு. இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகளால் பாவங்கள், கர்மவினைகள் தீர்ந்து, வெற்றிகளும், நன்மைகளும் அதிகரிக்கும். வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை.

அதே சமயம் ஆடி பெளர்ணமி அன்று சில குறிப்பிட்ட தவறுகளை மட்டும் தெரியாமல் கூட செய்து விடக் கூடாது. இதனால் வீட்டில் உள்ள செல்வ வளம் குறைந்து, மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படும் ஆடி பெளர்ணமி நாளில் எந்த தவறுகளை செய்யக் கூடாது, எவற்றை எல்லாம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆடி பெளர்ணமி அன்று செய்யக் கூடாத தவறுகள் :

1. ஆடி பெளர்ணமி அன்று, குறிப்பாக மாலை நேரத்தில் யாருக்கும் அரிசி, உப்பு, பணம், பருப்பு போன்றவற்றை கடனாக கொடுத்து விடாதீர்கள். இது உங்கள் வீட்டில் இருக்கும் செல்வத்தை நீங்களே அவமதித்து, வெளியே அனுப்புவதற்கு சமமானதாகும்.
2. ஆடி பெளர்ணமி அன்று மாலை நேரத்தில் வீட்டை இருள் சூழ்ந்ததாக வைத்திருப்பதோ அல்லது மாலை நேரத்தில் தூங்குவதோ வீட்டில் தரித்திரத்தை ஏற்படுத்தும்.
3. ஆடி பெளர்ணமி நாளில் வீட்டை சுத்தம் இல்லாமல் வைத்திருத்தல், சமையல் அறையில் உணவு பாத்திரங்களை கழுவாமல் போட்டு வைத்தல், அசைவம் சாப்பிடுதல் ஆகியவை வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரித்து, வறுமையை அதிகரிக்கும்.
4. இந்த நாளில் முடி, நகம் வெட்டுதல், கடன் கொடுத்தல் அல்லது வாங்குவதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
5. யாரிடமும் வீணாகச் சண்டை இடவோ, கோபப்படவோ அல்லது தீய வார்த்தைகளைப் பேசவோ கூடாது.

ஆடி பெளர்ணமியில் செய்ய வேண்டியவை :

1. ஆடி பெளர்ணமி தெய்வீக ஆற்றல் அதிகம் நிறைந்த நாள் என்பதால் இந்த நாளில் மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். பூஜை அறையிலும், வீட்டின் தலைவாசலுக்கு அருகிலும் விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும்.
2. அம்பிகைக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபடலாம். குறிப்பாக அபிராமி அந்தாதி படித்து வழிபடுவது சிறப்பு.
3. வீட்டில் திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு குங்கும அர்ச்சனை ஆகியவை செய்து வழிபடலாம். இதனால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.
4. அதிகாலையில் நீராடி, சிவபெருமான் அல்லது அம்மன் கோவில்களுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவதுடன், சந்திர தரிசனம் செய்து விரதம் இருக்க வேண்டும்.
5. பௌர்ணமி அன்று கங்கை, கோதாவரி போன்ற புண்ணிய நதிகளில் குளித்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
6. பெளர்ணமி அன்று அன்னதானம் செய்னதால் கர்மவினைகள் கரைந்து, புண்ணியங்கள் கிடைக்கும்.

Source link