Akka: "அவர்களுக்கு ஏன் இந்த இன்செக்யூரிட்டி வருகிறது என்று தெரியவில்லை" – கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘அக்கா’ வெப் சீரிஸ் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்திற்கான புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் இயங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கீர்த்தி சுரேஷ், படப்பிடிப்புத் தளத்தில் அவர் எதிர்கொண்ட அனுபவங்கள் தொடர்பாகப் பேசியிருக்கிறார்.

Akka Webseries
Akka Webseries

கீர்த்தி சுரேஷ், “லட்சியமும் திறமையும் கொண்ட பெண்களைப் பார்க்கும்போது சிலருக்கு ஏன் இந்த இன்செக்யூரிட்டி வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

என் திரைப்பயணத்தில் அப்படிப்பட்ட சில இன்செக்யூர் ஆண் நடிகர்களுடன் பணியாற்றும் சூழல் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் படப்பிடிப்பு நடக்கும்போது என்னால் இதைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

‘நமக்குத்தான் ஏதோ பிரச்னையோ, நாம்தான் தவறாக நடக்கிறோமோ?’ என்று என்னையே நான் சந்தேகப்படத் தொடங்கினேன். ஆனால் படப்பிடிப்பு முடியும்போதுதான் எனக்கு உண்மை புரிந்தது. தவறு என்னிடம் இல்லை, அவர்களின் சொந்த இன்செக்யூரிட்டிதான் என்னை அப்படி உணர வைத்திருக்கிறது.

லட்சியத்தோடு வாழும் பெண்களை ஒரு கட்டத்திற்கு மேல் பார்த்தால் சிலருக்குப் பயம் வந்துவிடுகிறது போல” எனப் பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக கீர்த்தி சுரேஷைத் தொடர்ந்து பேசிய நடிகை ராதிகா ஆப்தே, “லட்சியம் கொண்ட பெண்களைக் கண்டு எல்லா ஆண்களும் பயப்படுவதில்லை. ஆம், அப்படிப்பட்ட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் அதேவேளையில் பெண்களுக்குத் தோளோடு தோள் கொடுத்து இணைந்து பணியாற்றும் எத்தனையோ சிறந்த ஆண்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

Keerthy Suresh
Keerthy Suresh

அதேபோல், நமக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கும் சில பெண்மணிகள்கூட சில நேரங்களில் உதவாமல் போவதுண்டு. மனிதர்கள் என்றால் அப்படி இப்படி இருக்கத்தான் செய்வார்கள். இருப்பினும், தற்காலத்தில் படப்பிடிப்புத் தளங்களில் பெண்களின் பங்களிப்பும் சமத்துவமும் முன்பை விட அதிகமாகவே இருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.

Source link