மசோதா தோல்வி
இந்த வாக்கெடுப்பில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு போதிய ஆதரவு இல்லை என்பதால் இந்த மசோதா கைவிடப்பட்டது. இதன் காரணமாக தமிழக அரசு பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். டெல்லியை தமிழ்நாடு வீழ்த்தியது என முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்தார். ஆனால் இந்த மசோதாவுடன் பெண்களுக்கான மகளிர் இடஒதுக்கீடு மசோதாவும் தற்போது செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா
தொகுதி மறுவரையறை செய்த பிறகே மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக மகளிருக்கான 33 இடஒதுக்கீடு மசோதாவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.மகளிருக்கான உரிமையை திமுக அரசு பறித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அன்புமணி காட்டம்
குறிப்பாக பாமக அன்புமணி திமுக அரசை கடுமையாக விமர்சித்து இருக்கின்றார். பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டு சேர்ந்து செயல்படுத்த முடியாமல் செய்துவிட்டனர். அந்த மசோதாவை திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தோற்கடித்துவிட்டனர். இதனால் பெண்களுக்கான இடஒதுக்கீடு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் திமுக தான் முழு காரணம்.
எனவே திமுகவிற்கும் அதன் தோழமை கட்சிகளுக்கும் ஒரு பெண் கூட வாக்களிக்க கூடாது. பெண்களின் உரிமையை பிரித்த திமுகவிற்கு பெண்கள் யாரும் வாக்களிக்க கூடாது என காட்டமாக பேசியுள்ளார் அன்புமணி. நேற்றைய பரப்புரையில் கூட அன்புமணி தொகுதி மறுவரையறை வடமாநிலங்களில் மட்டுமல்ல தென் மாநிலங்களிலும் தான் நடைமுறைக்கு வரும். எனவே தென் மாநிலங்களிலும் தான் தொகுதிகள் அதிகரிக்கும்.
இது புரியாமல் திமுக அரசு இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றனர் என கூறி விமர்சனம் செய்தார். தற்போது இந்த மசோதா தோல்வியை சந்தித்ததன் பிறகு பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவையும் திமுக தோற்கடித்ததாக அன்புமணி குற்றம்சாட்டி வருகின்றார். ஆனால் இந்த தொகுதி மறுவரையறை அமல்படுத்தப்பட்டால் பாஜகவின் சதி திட்டம் நிறைவேறிவிடும். அதற்கு நாம் வழிவகுக்க கூடாது என்பதால் தான் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து போராடினோம் என்கின்றனர் திமுகவினர்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இந்த மசோதா மட்டும் நிறைவேறியிருந்தால் தொகுதிகளை அதிகப்படுத்த அதிகளவில் பணம் செலவாகும். அதெல்லாம் மக்களின் மீது தான் தாக்கத்தை உண்டாக்கும். எனவே இந்த மசோதா தோல்வியை சந்தித்தது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும் என்கின்றனர் திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள். இந்நிலையில் இந்த மசோதா தோல்வியை சந்தித்ததால் பெண்களுக்கு கிடைக்கவேண்டிய 33 % இடஒதுக்கீட்டையும் திமுக அரசு கெடுத்துவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இதே கருத்தை கூறி வருவதால் பெண்களின் மனநிலை என்னவாக இருக்கும். எதிர்க்கட்சிகளின் இந்த குற்றசாட்டுகள் திமுகவை பாதிக்குமா ? அல்லது இந்த சட்ட மசோதா தோல்வியை சந்தித்தது சரி தான் என தமிழ்நாடு பெண்கள் நினைத்து திமுக பக்கம் நிற்பார்களா ? என்பது தான் கேள்வியாக இருக்கின்றது.
இருப்பினும் தமிழ்நாடு பெண்கள் ,எங்களுக்கு இடஒதுக்கீடு மசோதாவை மட்டும் கொண்டு வாருங்கள் போதும் என கூறி வருவதையும் பார்க்க முடிகின்றது. ஒட்டுமொத்தமாக தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தோல்வியை சந்தித்ததை ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
