மகளிர் ஆசியக் கோப்பை 2026 தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணியில், ஓபனர்கள் தொடர்ச்சியாக அபாரமாக விளையாடினார்கள். இருவரும் அரை சதம் கடந்து, 12 ஓவர்கள் வரை நிலைத்து நின்று விளையாடினர். ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 59 ரன்களை சேர்த்த நிலையில், ஷபாலி வர்மா 39 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 68 ரன்களை சேர்த்து அசத்தினார்.
இப்படி, இருவரும் சேர்ந்து, மொத்தம் 77 பந்துகளில் 129 ரன்களை குவித்து, வலுவான துவக்கத்தை கொடுத்தனர். பிறகு, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 14 (14), ரிசா கோஷ் 17 (13), குனாலன் கமிலினி 15 (5) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை அடித்ததால், இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 183/5 ரன்களை சேர்த்தது.
இலங்கை மகளிர் அணியில், எந்த பௌலரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இலங்கை மகளிர் அணி இன்னிங்ஸ்: இலக்கை துரத்திக் களமிறங்கிய இலங்கை மகளிர் அணியில், கேப்டன், ஓபனர் சமாரி அட்டபட்டு 32 பந்துகளில் 35 ரன்களை எடுத்தார். இதுதான், அந்த அணியின் பெரிய ஸ்கோராக இருந்தது. விஷ்மி 20 (22), நிலாக்ஷிகா 22 (16) ஆகியோரை தவிர எந்த பேட்டரும் இரட்டை இலக்க ரன்களை அடிக்கவில்லை. இறுதியில், இலங்கை மகளிர் அணி, 20 ஓவர்களில் 111/10 ரன்களை எடுத்து, 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஶ்ரீசரணி 4 ஓவர்களில் 20 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். தீப்தி சர்மா, 4 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை எடுத்து, சிறந்த பந்துவீச்சுகளை பதிவு செய்தனர்.
கோப்பையை வாங்க வரவில்லை: இறுதிப் போட்டியில், இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றப் பிறகு, கோப்பையை வழங்கும் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அப்போது, விழா மேடையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை மோக்ஷின் நக்வியும் நின்றிருந்தார். அப்போது, கோப்பையை வாங்க இந்திய மகளிர் அணியினர், தயாராகிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், ஓய்வு அறையில் இருந்து முதலில் ஸ்மிருந்தி மந்தனா வெளியே வந்த நிலையில், மோக்ஷின் நக்வியை பார்த்ததும், பிறகு அப்படியே ஓய்வு அறைக்கு நடையைக் கட்டினார். இதனால், மோக்ஷின் நக்விக்கு பெரிய அவமனம் கிடைத்தது.
பிறகு, இதனை சமாளிப்பதற்காக உடனே விழா மேடையில் இருந்து கீழே இறங்கிய அவர், இலங்கை மகளிர் அணியினர் இருந்த ஓய்வு அறைக்கு சென்று, ரன்னர் அப் பரிசுகளை வழங்கிவிட்டு சென்றார். மேலும், மகளிர் ஆசியக் கோப்பையையும் அவர் கையோடு எடுத்துச் சென்றார்.
இதற்குமுன், ஆடவர் ஆசியக் கோப்பை தொடரிலும் கூட இதேபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. மோக்ஷின் நக்வி கையால் கோப்பையை வாங்க மாட்டோம் எனக் கூறி, இந்திய வீரர்கள் புறக்கணித்தனர். இதனால், ஆடவர் ஆசியக் கோப்பையும் மோக்ஷின் நக்வியிடம்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
