பாளையங்கோட்டை: குப்பைக் கிடங்காக மாறி வரும் பிரதான சாலை… அலட்சியம் தவிர்ப்பார்களா அதிகாரிகள்?

September 11, 2026 Vikatan 0

தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில், சுமார் 2 கி.மீ பரப்பளவிற்குள் டஜனுக்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிகளும், கல்லூரிகளும் செறிந்து காணப்படுகின்றன. தூய யோவான் கல்லூரியின் சுவர்களுக்கு வெளியே, மலை போல் குப்பைகள் […]

`இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம்' – அமெரிக்க ஆய்வு அறிக்கை சொல்வதென்ன?

September 11, 2026 Vikatan 0

இந்தியாவிடம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிடம் 190 அணுகுண்டுகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானை விட சுமார் 20 அதிகம் என்று அமெரிக்காவை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு […]

Pradeep Rawat: ரத்தப் புற்றுநோயால் 'கஜினி' பட வில்லன் காலமானார்

September 11, 2026 Vikatan 0

‘லகான்’, ‘கஜினி’, ‘வீரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ராவத் நேற்று காலமானார். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இவருக்கு வயது 74. Pradeep Rawat […]

India Inc-ன் உயர் பதவிகளில் பெண்கள் பிரதிநிதித்துவம் சரிவு: ஆய்வு வெளிப்படுத்தும் அதிர்ச்சி தரவுகள்!

September 11, 2026 Vikatan 0

இந்திய நிறுவனங்களில் ஒட்டுமொத்தப் பணியாளர் அளவில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்திருந்தாலும், நிர்வாகத்தின் மிக உயர்ந்த பதவிகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் சரிவைக் கண்டுள்ளது. நாட்டின் முன்னணி பன்முகத்தன்மை ஆய்வு நிறுவனமான ‘Avtar Career Creators […]

"திரை கதாநாயகனாகவோ, வேறு சாதியை சேர்ந்தவனாகவோ இருந்திருந்தால் தூக்கி கொண்டாடி இருப்பார்கள்" – திருமா

September 11, 2026 Vikatan 0

திருமண விழாவில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் திமுகவின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார். “திமுகதான் எங்களை கைவிட்டுவிட்டது. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை. மதிமுகவை தனிச் சின்னத்தில் நிற்க வைத்தீர்களே, அது அவர்களுக்கு வருத்தம் […]

Spotify: முதல் முயற்சி; ஸ்பாட்டிஃபையில் வெளியாகும் முதல் குறும்படம்! – பிஜாய் நம்பியார் மனைவி பேட்டி

September 11, 2026 Vikatan 0

ஆடியோ வடிவத்திற்கு என பிரத்யேகமாக இயங்கி வந்த ‘ஸ்பாட்டிஃபை’ தளத்தில், இப்போது குறும்படங்களும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. ‘டுயட்’ என்ற குறும்படத்தை ஸ்பாட்டிஃபை தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ஷார்ட் ஃபிலிமை இயக்குநர் பிஜாய் நம்பியாரின் மனைவியும், […]

“மக்களின் தேவைகளையும், உரிமைகளையும் விவாதிக்க வேண்டிய சட்டமன்றம் இன்றைக்கு…" – சீமான் ஆவேசம்

September 11, 2026 Vikatan 0

இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது. தவெக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இம்மானுவேல் சேகரனாருக்கு மரியாதை […]

"அடுத்த முதல்வர் திருமாவளவன்தான் என ஆதவ் பிரசாரம் மேற்கொள்ள சொன்னார், ஆனால்..!' – திருமா சொல்வதென்ன?

September 11, 2026 Vikatan 0

விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் திமுகவுடான கூட்டணி குறித்து பேசியிருக்கிறார். ” தொடர்ச்சியாக திமுகவுடன் நாங்கள் கூட்டணியில் இருந்தோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே திமுகவுடனானக் கூட்டணியில் இருந்து சிலர் விசிகவை […]

குளிர்பானத்தில் மயக்க மருந்து; 33 வயது நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த 73 வயது இயக்குநர்

September 11, 2026 Vikatan 0

பாலிவுட் படங்களான ‘படே தில் வாலா’ (Bade Dil Wala) மற்றும் ‘ஜோரு கா குலாம்’ (Joru Ka Ghulam) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஷகீல் நூரானி (73). திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான […]

"புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அதிமுக கூறவில்லை; ஆனால்…" – எடப்பாடி பழனிசாமி

September 11, 2026 Vikatan 0

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்து தவெக அரசுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி […]

BRICS மாநாடு: புதின், ஜி ஜின்பிங், மசூத் பெசெஷ்கியானை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் மோடி!

September 11, 2026 Vikatan 0

இந்தியா டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நாளையும், நாளை மறுநாளும் (செப்டம்பர் 12, 13) நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் பிரிக்ஸ் அமைப்பின் தலைமை மாறும். அப்படி இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை […]

Ramayana: "ராமாயணா முதல் பாகத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.4000 கோடி கிடையாது!" – கணக்கு சொல்லும் யஷ்

September 11, 2026 Vikatan 0

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படம், இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட் முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படமாகப் பேசப்பட்டு வருகிறது. Ramayana Movie இப்படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, இரண்டு பாகங்களாக உருவாகும் […]

தாயின் கனவை நனவாக்கிய GenZ மகள் – அசத்தும் சீர் தட்டுகள் டெக்கரேஷன் பிசினஸ்!

September 11, 2026 Vikatan 0

தன் தாயின் கனவுகளை நனவாக்குவதற்காக, GenZ மகள் புதிதாக ஒரு பிஸினஸைத் தொடங்கியுள்ளார். பெயர் மித்ர ப்ரத்திகா, முதுகலை இயற்பியல் படித்து வருகிறார். தனது அம்மாவின் புதைந்த கனவுகளை மீட்டெடுத்து, கோயம்புத்தூரில் மைதிலி ஆர்டிஸ்ட்ரி […]

நெல்லை: வெறிச்சோடிய உழவர் சந்தை… இரவில் மது அருந்தும் இடமாக மாறிய அவலம்!

September 11, 2026 Vikatan 0

திருநெல்வேலி டவுன் பகுதியில் அமைந்துள்ள கண்டியப்பேரி உழவர் சந்தை, ஒரு காலத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் அதிகம் பயன்படுத்திய இடமாக இருந்தது. ஆனால் தற்போது வியாபாரம் முழுமையாக நின்று, சந்தை வளாகம் வெறிச்சோடி கிடக்கிறது. நேரில் […]

"ஈரான் போரைத் தொடங்கியதற்காக நான் வருத்தப்பட்டதே இல்லை; காரணம்…" – ட்ரம்ப்

September 11, 2026 Vikatan 0

ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஹார்முஸ் நீர்ச்சந்தியும் மூடிதான் இருக்கிறது. குறிப்பிட்ட கப்பல்களுக்கு மட்டும் அவ்வப்போது அனுமதி கிடைத்து வருகிறது. ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் அமெரிக்கா, இஸ்ரேலைத் தாண்டி, உலக நாடுகளுக்கே பிரச்னையாக மாறியிருக்கிறது. […]

"உங்க வரம்புக்குள் இருங்க; என் உதவி தேவைப்படலாம்" – மனைவி சுனிதாவுக்கு நடிகர் கோவிந்தா எச்சரிக்கை

September 11, 2026 Vikatan 0

பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கு வேறு ஒரு டிவி நடிகையுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி சுனிதா அஹுஜா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனை பொது இடங்களிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் சுனிதா தெரிவித்து வருகிறார். […]

Varun Tej: "நீ வந்த பின்தான்… அன்பையே நான் கண்டிருக்கிறேன்!"- குழந்தை பற்றி வருண் – லாவண்யா தம்பதி

September 11, 2026 Vikatan 0

நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி தம்பதிக்குக் கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குக் கடந்தாண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருந்தது. Varun Tej – Lavanya Tripathi’s Son […]

கொத்தடிமைக் கொடூரம்: “கர்ப்பிணி மரணம்; சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்" – திருமாவளவன்

September 11, 2026 Vikatan 0

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கத்தில், மர வியாபாரியிடம் வாங்கிய முன்பணத்திற்காக மருத்துவமனைக்கு செல்ல விடாமல் தடுத்ததால், நிறைமாத கர்ப்பிணி தேன்மொழியும் அவரது சிசுவும் கூடாரத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு […]

"நான் என் அடையாளத்தை இழந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்" – சமந்தா

September 11, 2026 Vikatan 0

நடிகை சமந்தா சமீபத்தில் ‘The Hollywood Reporter’ ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார். மயோடிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து அந்த நேர்காணலில் பேசியிருக்கும் சமந்தா, “மயோடிஸ் நோயால் நான் பாதிக்கப்பட்டிருந்தப்போது என் அடையாளத்தை நான் […]

"மும்பை முழுக்க குப்பைமயம்" – நாட்டின் பணக்கார மாநகராட்சியைச் சாடிய உயர்நீதிமன்றம்

September 11, 2026 Vikatan 0

மும்பை காஞ்சூர்மார்க் குப்பைக் கிடங்கில் இருந்து வரும் மாசு கலந்த காற்றால் பாதிக்கப்பட்டுள்ள கன்னம்வார் நகர் மக்கள் இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் […]