Bank Loan Rates,வட்டியைக் குறைக்கும் வங்கிகள் – வெளிநாட்டு வங்கிகள்தான் பெஸ்ட் – ரிசர்வ் வங்கி ரிப்போர்ட் – foreign banks are in front in reducing loan rates than indian banks says rbi report

ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும்போது அதன் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் வங்கிகள் தங்களுடைய பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்கும். இது மக்கள் வாங்கும் பல்வேறு வகையான கடன்களுக்கான EMI சுமையைக் குறைக்கும். அதேபோல, ரெப்போ வட்டி குறைக்கப்படும்போது வங்கிகளின் பல்வேறு வகையான வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும்.

இந்நிலையில், வட்டி விகிதக் குறைப்பின் முழுப் பலன்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் வெளிநாட்டு வங்கிகளே முதலிடத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போதைய வட்டிக் குறைப்பு காலத்தில் பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளை விட வெளிநாட்டு வங்கிகளே கடன்கள் மற்றும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை அதிகமாகக் குறைத்துள்ளன. இது குறித்த விரிவான தகவல்கள் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள மாதந்திர அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

EBLR மற்றும் MCLR வட்டி விகிதக் குறைப்பு!

ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, 2025 பிப்ரவரி மாதம் முதல் 2026 மே மாதம் வரையிலான காலகட்டத்தில், பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் தங்களுடைய ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்ட EBLR (External Benchmark-Based Interest Rate) மற்றும் MCLR (Marginal Cost of Funds-based Lending Rate) ஆகிய வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.

புதிய கடன்களுக்கான வட்டி விகிதம்:

புதிய கடன்களுக்கான சராசரி வட்டி விகிதக் குறைப்பில் வெளிநாட்டு வங்கிகளே முன்னிலை வகிக்கின்றன:

வெளிநாட்டு வங்கிகள்: 1.24 சதவீதம் குறைப்பு

தனியார் வங்கிகள்: 1.08 சதவீதம் குறைப்பு

பொதுத் துறை வங்கிகள்: 0.66 சதவீதம் குறைப்பு

விண்ணை முட்டும் தங்கம் விலை – இனி நகை வாங்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம்

நிலுவையில் உள்ள கடன்களுக்கான வட்டி விகிதம்:

வாடிக்கையாளர்கள் ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பதிலும் வெளிநாட்டு வங்கிகளே அதிக பலனை அளித்துள்ளன:

வெளிநாட்டு வங்கிகள்: 1.20 சதவீதம் குறைப்பு

தனியார் வங்கிகள்: 0.98 சதவீதம் குறைப்பு

பொதுத்துறை வங்கிகள்: 0.81 சதவீதம் குறைப்பு

வைப்புத்தொகை வட்டி விகித மாற்றங்கள்:

வட்டி விகிதக் குறைப்பால் டெபாசிட் செய்பவர்களுக்கான வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டு வங்கிகளே அதிகளவிலான வட்டிக்குறைப்பை மேற்கொண்டுள்ளன:

புதிய பிக்சட் டெபாசிட்கள்:

வெளிநாட்டு வங்கிகள்: 0.91 சதவீதம் குறைப்பு

தனியார் வங்கிகள்: 0.74 சதவீதம் குறைப்பு

பொதுத்துறை வங்கிகள்: 0.73 சதவீதம் குறைப்பு

நிலுவையில் உள்ள டெபாசிட்கள்:

வெளிநாட்டு வங்கிகள்: 0.90 சதவீதம் குறைப்பு

தனியார் வங்கிகள்: 0.46 சதவீதம் குறைப்பு

பொதுத்துறை வங்கிகள்: 0.53 சதவீதம் குறைப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் உயரும்? பிட்மென்ட் காரணி 2.0 மீது எதிர்பார்ப்பு

ரெப்போ வட்டி விகிதக் குறைப்பு பின்னணி!

கடந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்திலிருந்து ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை ஒட்டுமொத்தமாக 1.25 சதவீதம் குறைத்துள்ளது. முன்னதாக, பிப்ரவரி, ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாத நாணயக் கொள்கைக் கூட்டங்களில் தலா 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. அடுத்து ஜூன் மாதக் கூட்டத்தில் 0.50 சதவீதம் குறைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட், அக்டோபர் மற்றும் 2026 பிப்ரவரி மாதக் கூட்டங்களில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே பராமரிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Source link