Chef Dhamu: கின்னஸ் சாதனையாளர்! ‘பத்ம ஸ்ரீ ‘ செஃப் தாமு காலமானார்!

சென்னை: பிரபல சமையல் கலை நிபுணர் செஃப் தாமு என்கிற கே. தாமோதரன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 72. சமையல் கலைத் துறையில் நீண்ட கால சேவைக்காக கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதை பெற்றார்.

சமையல் கலை நிபுணர் செஃப் தாமு (கே.தாமோதரன்) அண்மைக்காலமாக குக் வித் கோமாளி உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். இவர் ஏற்கெனவே பிரபல சமையல் கலைஞராக அறியப்படுகிறார்.

இவருக்கு அண்மைக்காலமாக உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை காலமானார்.

உணவக மேலாண்மை, சமையல் கலை தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியாவின் சமையல் நிபுணர் இவர். கடந்த 2010ஆம் ஆண்டு தொடர்ந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக சமையல் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.