Chennai News Live Updates: டெல்லியில் தொடர் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மாணவர்கள் போராட்டத்திற்கு தவெக அரசு துணை நிற்கும் – ஆதவ்

சென்னையில் உள்ள் எஸ்.ஆர்.எம். பல்கலை.யில் விளையாட்டு வீரர்கள் விடுதியை திறந்துவைத்த பின் அமைச்சர் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நீட் தொடர்பாக போராடுபவர்களுக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உள்ளது. அனிதா உள்ளிட்ட பல சகோதர, சகோதரிகளை தமிழகம் இழந்து உள்ளது. நீட்டை தடை செய்ய வேண்டும். டெல்லியின் குரலுக்கும் தமிழகத்தின் குரலுக்கும் வித்தியாசம் உள்ளது. கிராமப்புற மாணவர்களின் சிரமம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். நீட்டை உறுதியாக எதிர்க்கிறோம், வெறும் அரசியலுக்காக அல்ல. ஒருநாள் நீட்டை தடைசெய்ய எங்களுடைய குரல் முக்கியமானதாக இருக்கும். அரசியல் லாபத்திற்காக அல்லாமல் நீட்டை உறுதியாக எதிர்க்கிறோம் என்றார்.

தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறது த.வெ.க அரசு – அன்புமணி

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் நடக்கவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பது மிகவும் தவறான நிலைப்பாடு என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கர்நாடகத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தை ஏற்பாடு செய்வது யார்? மத்திய அரசா, கர்நாடக அரசா? என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. ஆனால், மேகதாது குறித்து பேச்சு நடத்த முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக அதிகாரிகள் மின்னஞ்சல் வாயிலாக அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்று நேற்று ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் கர்நாடக அரசின் அழைப்பை ஏற்றுத்தான் விஜய் அம்மாநிலத்திற்கு பேச்சு நடத்த செல்வதாகத் தோன்றுகிறது. இது மிகவும் தவறு. மாறாக, சட்டப் போராட்டங்களின் மூலம் மேகதாது அணை கட்டுவதற்கான சதித் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source link