Chennai News Live Updates: தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

முதல்வர் விஜயை அவதூறாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், பேரவை தலைவரை கேட்டுவிட்டுதான் கைது செய்ய வேண்டும் என்கிற விதி இல்லை. 291-வது விதி என்ன சொல்கிறது என்றால். பேரவைத் தலைவர் முன் அனுமதியின்றி எவரையும் பேரவை அமைப்பு எல்லைக்குள் கைது செய்யக்கூடாது. அதைபோன்று உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் கட்டளையையோ, அறிவிப்பையோ பேரவை தலைவர் முன் அனுமதியின்றி பேரவையின் அமைப்பு எல்லைக்குள் சேர்ப்பித்தல் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஆளும் கட்சிக்கு சாதகமாக எம்.எல்.ஏ கைதுக்கு தனது அனுமதி தேவையில்லை என சபாநாயகர் கூறியுள்ளார். எம்.பி, எம்.எல்.ஏ கைது செய்யப்படும் போது அவைத் தலைவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது மரபு மட்டுமல்ல, விதி என்று கூறி சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையோடு செயல்பட வலியுறுத்தியுள்ளார்.

  • Jul 22, 2026 07:32 IST

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது – த.வெ.க கண்டனம்

    டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி காவல்துறையால் இழுத்துச் செல்லப்பட்டும் குண்டுகட்டாக தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதல், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்கால கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவது தொடர்கிறது. நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிக்குள்ளாவது நின்றபாடில்லை எனவே மத்திய அரசு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று த.வெ.க வலியுறுத்தியுள்ளது.

Source link