Chennai News Today Live Updates: உள்ளாட்சி அதிகாரிகள் பதவிக்காலம் நீடிப்பு

சென்னையில் பெட்ரோல் – டீசல் இன்றைய விலை நிலவரம்

சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு

தமிழகத்தில் உள்ளாட்சி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் பதவிக்காலத்தை 2027, ஏப்ரல் வரை நீட்டித்து அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

அதிக கடன்சுமை கொண்ட நாடுகள் பட்டியல் வெளியீடு

உலகில் அதிக கடன்சுமை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் இந்தியா 26-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் கடன் சுமை ஒப்பீட்டளவில் பாதுகாப்பான மற்றும் கட்டுக்குள் உள்ள நிலையில் தான் இருக்கிறது. இந்த பட்டியலில் சூடான் 335.4 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளதாக சர்வதேச நாயண நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • Oct 21, 2026 10:13 IST

    காவலர் வீரவணக்க நாள் நிகழ்வு – முதல்முறை டி.ஜி.பி. அலுவலகத்தில் விஜய்

    காவலர் வீரவணக்க நாள் நிகழ்வில் உயிரிழந்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் விஜய் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வருகிறார். இதற்காக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, தமிழக காவல்துறையினக் தலைமை அலுவலகமான டி.ஜி.பி அலுவலகத்திற்கு அவர் வருகை தருவது இதுவே முதல்முறை ஆகும். 

  • Oct 21, 2026 10:10 IST

    மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய இரு சக்கர வாகனத்தில் சென்ற அமைச்சர்

    சென்னையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அமைச்சர் ஆனந்த் இருசக்ரவாகனத்தில் சென்று மழை பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளார்.

  • Oct 21, 2026 10:08 IST

    தங்கம் விலை குறைவு

    சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் 1,07,120க்கும் ஒரு கிராம் ரூ.13,390க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.2,30,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source link