சென்னையில் பெட்ரோல் – டீசல் இன்றைய விலை நிலவரம்
சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கூட்டணி இல்லை என்றால் சேப்பாகத்தில் தி.மு.க தோற்றிருக்கும் – ஆதவ் அர்ஜூனா
காங்கிரஸ், விசிக, ஐ.யு.எம்.எல், கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லையென்றால் சேப்பாக்கத்தில் தி.மு.க தோற்றிருக்கும்.. கூட்டணி இல்லையென்றால் திமுக எதிர்க்கட்சியாகக்கூட வந்திருக்காது. 30 தொகுதிகளில் 10000 ஓட்டுக்கு கீழ் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்த ஓட்டுக்கள் கூட்டணி கட்சியின் ஓட்டுக்கள். ஆனால் தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சிகள் ஒரு முடிவு எடுத்தபிறகு தி.மு.க. அவர்களை எப்படி திட்டினார்கள் என்று உங்களுக்கே தெரியும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
நெரிசலில் சிக்கிய திருமாவளவன்
திருவண்ணாமலை, நாயுடுமங்கலத்தில் சமீபத்தில் உயிரிழந்த விசிக நிர்வாகி ஒருவரின் படத்திறப்பு விழாவுக்கு வந்த திருமாவளவனைத் தொண்டர்கள் சூழ்ந்ததால் அவர் நகர முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரைச் சந்தித்து நிதியுதவி வழங்க அவர் வீட்டிற்குச் சென்றபோது, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே போலீசார் அனுமதி அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த விசிகவினர், பாதுகாப்புப் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
-
Oct 24, 2026 10:19 IST
விமான எரிபொருள் மீதான வாட் வரி குறைப்பு – தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அமைச்சர் வரவேற்பு
விமான எரிபொருள் மீதான வாட் வரிசை குறைக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, வரவேற்றுள்ளார். இந்த நடவடிக்கைக்காக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ள அவர், விமான கட்டணத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். பயணிகள் நலனே முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
-
Oct 24, 2026 10:14 IST
மக்கள் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் -மேயர் பிரியாவுக்கு செங்கோட்டையன் பதில்
கரூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுவதை மேயர் பிரியா தடுப்பதாக கூறப்படுவது குறித்து செய்தியளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், மக்கள் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மக்களுக்கான பணிகளை மேற்கொள்வது அனைவரின் பொறுப்பு, அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
Oct 24, 2026 10:14 IST
காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை மண்டலமாக வலுபெறும் – இந்திய வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்தம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இன்று மாலைக்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். வரும் 26-ம் தேதி புயலாக வலுப்பெற்று 28ம் தேதி காலை ஆந்திர கடற்கரையை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
