Chennai News Today LIVE Updates: ‘த.வெ.க கிட்ட இருந்துதான் பெண்களை காப்பாற்றணும், சோப்ளாங்கி அரசு’: ஸ்டாலின் கடும் சாடல்

Tamil Nadu News LIVE

சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் சி.என்.ஜி (CNG) ஒரு கிலோ ரூ.97.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

உதகை மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து

மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையே இயக்கப்பட்டு வரும் புகழ்பெற்ற மலை ரயில் சேவை இன்று (அக்.30), நாளை (அக்.31) மற்றும் நவம்பர் 1-ஆம் தேதி ஆகிய 3 நாட்களுக்கு மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மண் சரிவு காரணமாக ஏற்கனவே அக்டோபர் 24 முதல் 29 வரை 6 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தண்டவாளப் பாதையைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இச்சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

  • Oct 30, 2026 10:34 IST

    இலட்சியப் பாதையில் பயணிப்போம்: தேவர் ஜெயந்தியில் விஜய் வாழ்த்து

    விஜய் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 

    ”தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன். சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்”

    என்று தெரிவித்துள்ளார்.

  • Oct 30, 2026 10:27 IST

    முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் குடியரசுத் துணைத் தலைவர், ஆளுநர் நேரில் மரியாதை

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் ஆளுநர் அர்லேகர் ஆகியோர் நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

  • Oct 30, 2026 10:26 IST

    முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜீவ் மற்றும் மதன்குமார் ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  • Oct 30, 2026 10:19 IST

    தேவர் ஜெயந்தி: ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழாவையொட்டி, மதுரையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

    Video: Sun News

  • Oct 30, 2026 10:18 IST

    தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய்

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழாவையொட்டி, சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    Video: PT Tv

  • Oct 30, 2026 10:15 IST

    குடியரசுத் துணைத் தலைவர் வருகை: மதுரையில் ட்ரோன்கள் பறக்கத் தடை

    குடியரசுத் துணைத் தலைவரின் வருகையையொட்டி பாதுகாப்புப் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

    மதுரை விமான நிலையம், குடியரசுத் துணைத் தலைவர் பயணிக்கும் வழித்தடங்கள் மற்றும் அவர் தங்கும் இடங்கள் ஆகிய பகுதிகளில் ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் ட்ரோன்களைப் பறக்கவிட முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மீறி ட்ரோன்களைப் பறக்கவிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது

  • Oct 30, 2026 10:15 IST

    தேவர் ஜெயந்தி: மதுரையில் இன்று முக்கியப் போக்குவரத்து மாற்றம்

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை மாநகரில் இன்று விரிவான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தேவர் ஜெயந்தி விழாவிற்கு வரும் வாகனங்கள் எம்.ஜி.ஆர் சந்திப்பு, தமுக்கம் மற்றும் மீனாட்சி கல்லூரி சாலையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் நிலையில், பிற வாகனங்கள் நத்தம் பாலத்தில் மாறணி சந்திப்பு முதல் திருப்பாலை சந்திப்பு வரை மட்டுமே அனுமதிக்கப்படும் எனக் காவல் துறை அறிவித்துள்ளது.

    மேலும், அழகர்கோவில் சாலையில் கருப்பணசாமி கோயில் முதல் நேதாஜி பாலம் வரை எந்த வாகனமும் செல்ல அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், கனரக வாகனங்கள் இன்று இரவு 10.30 மணி வரை மதுரை மாநகருக்குள் நுழைய முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • Oct 30, 2026 10:14 IST

    டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு நவம்பர் 1 முதல் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணம் ரூ.10 விதிப்பு

    தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து வகையான மதுபாட்டில்களுக்கும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணமாக ரூ. 10 விதிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. காலி மதுபாட்டில்களைத் திரும்ப வழங்கும் திட்டத்திற்கு மாற்றாக இந்த புதிய கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டு, நேரடியாகவே மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையுடன் (MRP) சேர்த்து வசூலிக்கப்பட உள்ளது.

    அதேவேளையில், பாட்டிலில் அச்சிடப்பட்டுள்ள உயர்த்தப்பட்ட எம்.ஆர்.பி விலைக்கு மேலாக எந்தக் கூடுதல் தொகையையும் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கக் கூடாது என்று விற்பனையாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவிடப்பட்டுள்ளது

  • Oct 30, 2026 10:13 IST

    சோப்ளாங்கி த.வெ.க அரசுக்கு பாடம் புகட்டுவோம்: ஸ்டாலின் கடும் விமர்சனம்

    மு.க.ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்ட வீடியோவில், 

    ”பெண்களை தவெக காப்பாற்ற வேண்டாம். தவெக கிட்ட இருந்துதான் பெண்களை காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கு. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எங்கேயும் போக வேண்டாம். தன்னோட கட்சியில் இருப்பவர்களை கட்டுப்படுத்தினாலே குற்றங்கள் பெருமளவில் குறையும்.

    குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட இந்த தவெக அரசு மீது பயமில்லை. இதை அவர்களுக்கான ஆட்சியாக கிரிமினல்கள் கொண்டாடுகிறார்கள். தலைநகரான சென்னையின் முக்கிய பகுதிகளில் கொலைகள் நடக்கிறது. ஜாமினில் வெளியே வரும் குற்றவாளிகள் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வரும்போதே ஓட ஓட விரட்டி கொலை செய்யப்படுகின்றனர்.

    சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி தவெக அரசு. முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.



Source link