Chennai News Today Live Updates: புழல் சிறை கைதிகள் தப்பிய விவகாரம்

சென்னையில் பெட்ரோல் – டீசல் இன்றைய விலை நிலவரம்

சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எங்களுக்கு அரசியல் சொல்லித்தரும் அளவுக்கு தி.மு.க. பெரிய கட்சி அல்ல – அமைச்சர் விஸ்வநாதன்

தி.மு.க.வுக்கு காங்கிரஸ் துரோகம் செய்ததாக யாரும் சொல்லக்கூடாது. 2024 மற்றும் 2026-ல் துரோகம் செய்தது யார்? 2026 தேர்தல் நிலவரம் வெளியானவுடன் பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியது யார்? அ.தி.மு.க.வுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்தது யார்? 143 ஆண்டுகால வரலாறு கொண்டது காங்கிரஸ் கட்சி. உங்களை போல் 40, 50 வருட வரலாறு  கொண்ட கட்சி அல்ல. எங்களுக்கு அரசியல் அரிச்சுவடி கற்றுக்கொடுக்கும் அளவுக்கு தி.மு.க. ஒன்றும் பெரிய கட்சி அல்ல என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ.க்களுக்கு மாத ஊதியம் ரூ.1.80 லட்சமாக அதிகரிப்பு

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வசதி தவிர்த்து, உயர்த்தப்பட்ட மாதாந்திர படிகள் மற்றும் ஊதியம் வழங்கும் புதிய முறை அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, போக்குவரத்துப் படி மாதம் ரூ.75,000 மற்றும் உதவியாளர் படி ரூ.25,000 என உயர்த்தப்பட்டு வழங்கப்படவுள்ளது. இம்மாற்றத்தின் மூலமாக, இதுவரை ரூ.1.05 லட்சமாக இருந்து வந்த எம்.எல்.ஏ.க்களின் மொத்த மாத ஊதியம் தற்போது ரூ.1.80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.17 கோடி கூடுதல் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Oct 23, 2026 10:15 IST

    பருவதமலையில் சாமி தரிசனம் செய்ய இன்று ஒருநாள் தடை

    கனமழை காரணமாக, திருவண்ணாமலை பருவதமலையில் பக்தர்கள் மலை ஏறிச் சாமி தரிசனம் செய்ய இன்று ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • Oct 23, 2026 10:14 IST

    சாத்தான்குளம் அருகே 2 சிறுமிகள் மீட்பு 

    சாத்தான்குளம் அருகே தாயை கொன்று கடத்தப்பட்ட 2 சிறுமிகள் நாசரேத், ஆனந்தபுரத்தில் உள்ள அறையில் மீட்கப்பட்டுள்ளனர். மர்ம நபர்கள் தாக்குதலில் சிறுமிகளின் தாய் மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட இரு சிறுமிகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  • Oct 23, 2026 10:13 IST

    புழல் சிறை கைதிகள் தப்பிய விவகாரம் – டி.ஜி.பி அதிரடி உத்தரவு

    புழல் சிறை கைதிகள் தப்பிய விவகாரம் குறித்து அனைத்து சிறைகளில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள சிறைத்துறை டி.ஜி.பி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய, மாவட்ட சிறைகள், பெண்கள் சிறையில் உடனடி ஆய்வு நடத்தவும், தணிக்கை அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். 

Source link