சென்னையில் பெட்ரோல் – டீசல் இன்றைய விலை நிலவரம்
சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
செஞ்சியில் சிறுமி காணாமல் போன வழக்கு சி.பி.சிஐடிக்கு மாற்றம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கு சி.பி.சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி கடந்த 12ம் தேதி அதிகாலை மாயமான நிலையில் காவல்துறை 10 நாட்களாகத் தேடியும் கிடைக்காததால் மாற்றப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் எதிரொலி – வண்டலூர் பூங்கா 2 நாட்கள் மூடல்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்வாழ் பறவைகளுக்கு H5N1 பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுளன்ளனதால், பறவைகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்றும் (அக்டோபர் 22) நாளையும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 22, 2026 10:05 IST
வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை (அக்டோபர் 23) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் தீவிரமடையும் என்று உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Oct 22, 2026 10:03 IST
இணைய வழியில் ம.நீ.ம செயற்குழு கூட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு இணையவழியில் நடைபெறுகிறது. இதில் அரசியல் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
