Tamil Nadu News LIVE
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி (CNG) விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல் (1 லிட்டர்): ரூ.107.77
டீசல் (1 லிட்டர்): ரூ.99.55
சி.என்.ஜி (1 கிலோ): ரூ.97.00
ஜூலை 30 வரை 8 மாவட்டங்களில் 7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை உயரும்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் திங்கள் கிழமை (ஜூலை 27) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தில் திங்கள் கிழமை முதல் ஜூலை 30-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.
-
Jul 27, 2026 07:32 IST
வினாத்தாள் முறைகேடு: புதிய மசோதா இன்று தாக்கல்
அரசு மற்றும் போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட 2024-ஆம் ஆண்டின் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கான புதிய மசோதா, நாடாளுமன்றத்தின் இன்றைய கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ‘பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா, 2026’-ஐ மக்களவையில் அறிமுகம் செய்ய முன்மொழிவார்.
மசோதா தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதை உடனடியாக அவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவும், ஆய்வு செய்து நிறைவேற்றவும் அவர் முன்மொழிவார். வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கவும், வழக்குகளின் விசாரணையை வேகப்படுத்தவும் இச்சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது.
