CJP நிறுவனர் அபிஜீத் திப்கேவின் தாய் பெருமிதம்

தனது மகனை நினைத்துப் பெருமைப்படுவதாக பூரிப்பு 

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கேயின் பெற்றோர், மாணவர்கள் போராட்டம் வெற்றியடைந்தது குறித்து நெகிழ்ச்சி தெரிவித்தனர். தனது மகனை நினைத்துப் பெருமைப்படுவதாகவும், நீண்ட நாள்கள் கழித்து அவரைச் சந்திக்கப் போவதாகவும் அபிஜித் தீப்கேவின் தாயார் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார். தனது மகனுக்கு ஆரத்தி எடுக்கவேண்டும் என்றும் அபிஜித் தீப்கேவின் தாயார் தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தெரியும் 

டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தங்களுக்கு தெரியும் என ஐ.நா கூறியுள்ளது. அமைதியான முறையில் போராட விரும்புவோர் துன்புறுத்தல், கைது போன்ற அச்சமின்றி அவர்கள் அனுமதிக்கப்படுவது முக்கியம் என்றும், அந்த உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது பாதுகாப்புப் படையினரின் கடமை என்றும், ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர், ஸ்டீபன் தெரிவித்தார்.

மக்கள் போராட்டங்களில் பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தாதீர்

மக்கள் போராட்டங்களின் போது பெல்லட் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் மீது அதிகப்படியான பலத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும், படையின் உணர்திறன்மிக்க காவல் என்ற கொள்கையை கண்டிப்பாக கடைப்பிடிக்கவும் பணியாளர்களுக்கு விரைவு அதிரடிப் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சீமா துண்டியா உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link