கோவை பெரியகடை வீதி கோனியம்மன் திருக்கோயிலில் கடந்த 15.07.2026 அன்று உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின் போது ஒரு உண்டியலை மட்டும் திட்டமிட்டு திருடிய 4 ஊழியர்கள் அதனை கண்டுபிடிக்காமல் இருந்த 2 சரக ஆய்வாளர்கள், 1 செயல் அலுவலர் மற்றும் 1 உதவி ஆணையர் ஆகியோரை கூண்டுடோடு பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு பிற்ப்பித்துள்ளார். மேலும் இவர்கள் மீது காவல்துறை வழக்கு பதியப்பட்டு விசாரணை துவங்கப்பட்டு உள்ளது.
திருட்டில் ஈடுபட்டவர்கள் விவரம்:
1. பாலசுப்ரமணியன் (சீட்டு விற்பனையாளர்)
2. சரவணன் (அலுவலக உதவியாளர்)
3. பிரதிப்குமார் (திருவலகு)
4. கிருஷ்ணராஜ் (பூசாரி)
அதிகாரிகள்:
1. ராம்குமார் (சரக ஆய்வாளர்)
2. உதயகுமார் (சரக ஆய்வாளர்)
3. குமார் (செயல் அலுவலர்)
4. உஷா நந்தினி (உதவி ஆணையர்)
