தமிழ்நாட்டின் வருவாய் பெருக்க சிறப்பு குழு
தமிழ்நாட்டின் வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து பரிந்துரை அளிக்க பொருளாதார நிபுணரும், மத்திய திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவருமான மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வருவாய் கசிவுகளைத் தடுத்து, வரி வசூலை மேம்படுத்தி புதிய வருவாய் ஆதாரங்களை கண்டறியும் நோக்கில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களில் பரிந்துரைகள் மற்றும் அறிக்கையை சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தை நாடும் தமிழ்நாடு அரசு
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ஆணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாதங்களை கேட்காமலேயே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், இதனால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
-
Jul 28, 2026 12:07 IST
சிறு, குறு தொழில்துறை திட்டங்கள் குறித்து விஜய் ஆலோசனை
பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சிறு, குறு தொழில்துறை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மதன்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், சிறு, குறு தொழில்துறையின் வளர்ச்சிக்கான நீண்ட கால செயல்திட்டத்தை உருவாக்குவது குறித்தும், தொழில் முதலீட்டு மானியம் வழங்குவது மற்றும் காப்புரிமை, புவிசார் குறியீடு பெறுவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
-
Jul 28, 2026 11:28 IST
தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் எடுத்து செல்ல தடை
தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் எடுத்து செல்ல தற்காலிக தடை தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கருங்கல் உள்ளிட்ட கனிம வளங்கள் எடுத்து செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு பதப்படுத்தப்படாத கற்களின் ஏற்றுமதிக்கு 3 மாதங்கள் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கற்கள் மற்றும் திரட்டுப் பொருட்களின், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் உத்தரவும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
-
Jul 28, 2026 10:51 IST
சின்ன பட்ஜெட் படங்கள்… விஜய் போட்ட முக்கிய உத்தரவு
சிறிய மற்றும் நல்ல திரைப் படைப்புகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மானியத் தொகையை எவ்வித தாமதமுமின்றி உடனடியாக வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற திரையுலகம் சார்ந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, நிலுவையில் உள்ள அரசு மானியம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, சிறிய படங்கள் மற்றும் நல்ல படைப்புகள் ஏன் நிலுவையில் இருக்க வேண்டும்? எதெல்லாம் நிலுவையில் இருக்கிறதோ, அத்தனை சிறு படங்களுக்கும் அரசு சார்பில் உடனடியாக மானியத்தை வழங்கிடுங்கள். அவர்கள் அதற்கு முழுத் தகுதியும் உரியவர்களும் ஆவர் என்று முதலமைச்சர் உடனடியாக உத்தரவிட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
-
Jul 28, 2026 10:46 IST
5 நாட்களில் ஜனநாயகன் ரூ.233.24 கோடி வசூல்
தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம், வெளியான 5 நாட்களில் உலகளவில் ரூ.233.24 கோடி வசூல் நடத்தியுள்ளது. இந்தியாவில் மட்டும் படம் ரூ.157. 74 கோடி வசூலித்துள்ள நிலையில் வெளிநாடுகளில் ரூ. 75.50 கோடி வசூலை எட்டியுள்ளது.
-
Jul 28, 2026 10:37 IST
பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் உயர் கல்வி அமைச்சர் விஸ்வநாதன். தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்தில் பாடப்படுவதற்கு கண்டனம். முனைவர் பட்டம் பெற இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலும் பங்கேற்கவில்லை. ஆளுநர் விழாவை நெல்லை, கடையநல்லூர் எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். மாணவர்களுக்கு பட்டங்களை ஆளுநர் அர்லேகர் வழங்க உள்ளார்
-
Jul 28, 2026 10:36 IST
மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைப்பு
தமிழ்நாட்டின் வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து பரிந்துரை அளிக்க பொருளாதார நிபுணரும், மத்திய திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவருமான மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வருவாய் கசிவுகளைத் தடுத்து, வரி வசூலை மேம்படுத்தி புதிய வருவாய் ஆதாரங்களை கண்டறியும் நோக்கில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களில் பரிந்துரைகள் மற்றும் அறிக்கையை சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
