CM Vijay News Live Updates: 16 வருட உழைப்பு, தோளில் தட்டி வாழ்த்திய தளபதி: வீட்டு வசதி வாரிய தலைவர் சிவா நெகிழ்ச்சி

தவெ.க அரசின் முதல் பட்ஜெட் – அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை

த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பல்வேறு துறைகளின் முக்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார், அந்த வகையில் நேற்று (ஜூலை 21) முதல்வர் விஜய் தலைமையில், மனிதவள மேலாண்மைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த பென்னட் கோல்மன் அண்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சுரிந்தர் சாவ்லா, இயக்குநர் சுதா நடராஜன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் ஆசிரியர் அருண் ராம், வெளியீட்டாளர் மணிகண்டன் நாயர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

முதல்வர் விஜய் சைகை காட்டியதில் விதிமீறல் இல்லை; சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம்

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் சைகை காட்டிய விவகாரத்தில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சட்டப்பேரவை நடைமுறைகளின்படி அந்தச் செயலில் விதிகளை மீறும் வகையிலான எந்த அம்சமும் இல்லை என்றும், எதிர்க்கட்சியினர் இந்த விவகாரம் தொடர்பாக அனுமதி கோரினால், அப்போதைய சூழ்நிலை மற்றும் அவையின் நடைமுறைகளைப் பொறுத்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். சபாநாயகரின் இந்த விளக்கம் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் நியமனம்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவராக சிவா என்பவரை நியமித்து அதற்கான அரசானையை முதல்வர் விஜய் வழங்கியுள்ளார். விஜய் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பெரம்பூர் தொகுதியை தனக்காக விட்டுக்கொடுத்தவர் சிவா என்று தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு கூட்டத்தில் விஜய் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Jul 22, 2026 09:37 IST

    16 வருட உழைப்பு, தோளை தட்டி வாழ்த்திய தளபதி: வீட்டு வசதி வாரிய தலைவர் சிவா நெகிழ்ச்சி

    தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவராக சிவா என்பவரை நியமித்து அதற்கான அரசானையை முதல்வர் விஜய் வழங்கியுள்ளார். இது குறித்து பேசிய சிவா, உன்னை இப்படி ஒரு இடத்தில் பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மேன்மேலும் நிறைய உயரங்களை எட்ட வேண்டும் என்று தோளில் தட்டி வாழ்த்தி அரசாணையை வழங்கினார். 16 வருடமாக மக்கள் இயக்கத்தில் உழைத்திருக்கிறேன். அந்த உழைப்புக்கு தளபதியே கொடுத்திருக்கும் அங்கீகாரம் தான் இது. முதல்வரின் சொல்படி இன்றும் அக்கறையோடு பொறுப்போடு மக்களுக்காக பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார்.

Source link