கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் இருந்தது, சிஎஸ்கே நிர்வாகம் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அணியின் மதிப்பும் சரிவடைய துவங்கிவிட்டதால், ஐபிஎல் 2027 சீசனில் அதிரடி கம்பேக்கை கொடுக்கை கொடுக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
இந்நிலையில், சிஎஸ்கேவை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, சிஎஸ்கே நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, ஐபிஎல் 2028 சீசனுக்கான மெகா ஏலத்தில் இருந்து, சிஎஸ்கேவை, இளம் வீரர்கள் கொண்ட அணியாக கட்டமைக்க முடிவு செய்துள்ளனர்.
குறிப்பாக, கேப்டன் பதவிக்கு சண்டைபோடும் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் இருவரையும், அடுத்த சீசனினோடு வெளியேற்ற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, அடுத்த சீசனின் முதல் பாதியில், சிஎஸ்கே தொடர்ச்சியாக வெல்லவில்லை என்றால், இரண்டாவது பாதியில் இருந்து ஆயுஷ் மாத்ரேவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும், அடுத்த சீசனில் கார்த்திக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகிய இருவருக்கு மாறி மாறி விக்கெட் கீப்பிங் பொறுப்பை கொடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ருதுராஜ், சாம்சன் இந்த இரண்டு வீரர்களும், அடுத்த சீசனில் அபாரமாக விளையாடினாலும், ஐபிஎல் 2028 சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன், இருவரையும் வெளியேற்ற சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கேப்டன் பதவிக்கு சண்டை போட்டதால்தான், சிஎஸ்கே இந்த முடிவை எடுத்துள்ளதாம். ஆயுஷ் மாத்ரேவை, அடுத்த 10 வருடங்களுக்கு தொடர்ச்சியாக கேப்டனாக ஆட வைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
4 முக்கிய வீரர்கள்: மேலும், இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆயுஷ் மாத்ரே, டிவோல்ட் பிரேவிஸ், கார்த்திக் சர்மா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோரை சுற்றி கட்டமைக்க முடிவு செய்துள்ளனர். இந்த நான்கு வீரர்கள்தான், இனி சிஎஸ்கேவின் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாற்றம், ஐபிஎல் 2028 சீசனில் இருந்து நடைமுறைக்கு வருமாம். ஒருவேளை, ஐபிஎல் 2027 சீசனின் முதல் பாதியில், சிஎஸ்கே படுமோசமாக சொதப்பினால், அடுத்த சீசனின் இரண்டாவது பாதியில் இருந்தே இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹேரி ப்ரூக்கை வாங்குவது உறுதி? மேலும், ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலத்தில் பங்கேற்க உள்ள ஹேரி ப்ரூக்கை வாங்க 25 கோடி வரை ஒதுக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, பிரசாந்த் வீர் போன்ற வீரர்களை விடுவித்து, மினி ஏலத்திற்கு அதிக தொகையுடன் செல்ல சிஎஸ்கே நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஹேரி ப்ரூக்கை வாங்கி ஓபனராக ஆட வைக்கவும், டிவோல்ட் பிரேவிஸை ஒன்டவுன் இடத்தில் ஆட வைக்கவும் சிஎஸ்கே நிர்வாகம் மிட்டமிட்டுள்ளது. மேலும், நூர் அகமதுவை வெளியேற்றிவிட்டு, இந்திய சுழற்பந்து வீச்சாளருக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. இப்படி, சிஎஸ்கேவின் எதிர்காலம் குறித்து, தொடர்ச்சியாக பல அதிரடி முடிவுகளை தற்போது இருந்தே சிஎஸ்கே நிர்வாகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. மேலும், தோனிக்கு ஆலோசகர் பதவி அல்லது அணியின் இயக்குநர் பதவியை கொடுக்கவும் அதிக வாய்ப்புள்ளதாம்.
