CSK – முடிந்தது சாம்சன் கதை? புது விக்கெட் கீப்பரை தேர்வு செய்த சிஎஸ்கே நிர்வாகம்: காரணம் இதுதான் – chennai super kings selected replacement player for sanju samson for long term

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்த 10 வருடங்களுக்கான அணியை கட்டமைக்கும் பணியை துவங்க முடிவு செய்துள்ளனர். இதனால், அணிக்கு தேவையில்லாத வீரர்கள், அணிக்கு அழுத்தம் கொடுக்கும் வீரர்களை கழற்றிவிட சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அழுத்தம் கொடுத்த சாம்சன்? ஐபிஎல் 2026 சீசனில், தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்ட சஞ்சு சாம்சன், 14 போட்டிகளில் 13 இன்னிங்ஸ் களமிறங்கி 34.07 சராசரி, 165.62 ஸ்ட்ரைக் ரேட்டில் 477 ரன்களை குவித்து அசத்தினார். இதில், 2 சதங்கள் அடங்கும்.

அதேநேரத்தில், சிஎஸ்கேவுக்கு கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட், 14 இன்னிங்ஸ் பேட்டிங் ஆடி, 123.40 ஸ்ட்ரைக் ரேட்டில்தான் ரன்களை அடித்தார். இதனால், ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தனக்குதான் கேப்டன் பதவியை தர வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகத்திற்கு சாம்சன் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், ருதுராஜ் கெய்க்வாட்டும், ஐபிஎல் 2027 சீசனில் தனக்கு கேப்டன் பதவி வேண்டும் என அடம்பிடிக்கிறாராம்.

இப்படி, இரண்டு வீரர்களும் கேப்டன் பதவிக்கு சண்டை போடும் நிலையில், இதுகுறித்து சிஎஸ்கே நிர்வாகம் தீவிர ஆலோசனையை மேற்கொண்டது. அந்த மீட்டிங்கில், தோனியும் கலந்துகொண்டார். இந்நிலையில், இந்த இருவரையும் நீக்க, தோனி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, ஐபிஎல் 2028 சீசனுக்கான மெகா ஏலத்தில் இருந்து, அடுத்த 10 வருடங்களுக்கான அணியை கட்டமைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான ஒத்திகையாக, ஐபிஎல் 2027 சீசனிலேயே, இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பினை கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். குறிப்பாக, சஞ்சு சாம்சனையும், கார்த்திக் சர்மாவையும் மாறி மாறி விக்கெட் கீப்பர்களாக ஆட வைக்க முடிவு செய்துள்ளனர்.

அடுத்து, ஐபிஎல் 2028 சீசனில் இருந்து கார்த்திக் சர்மாவை முழுநேர விக்கெட் கீப்பராக ஆட வைக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதாவது, ஐபிஎல் 2027 சீசன் முடிந்ததும், சாம்சனை கழற்றிவிட முடிவு செய்துள்ளனர்.

கார்த்திக் சர்மா, ஐபிஎல் 2026 சீசனில் 11 இன்னிங்ஸ் ஆடி, 32.78 சராசரியில், 136.57 ஸ்ட்ரைக் ரேட்டில் 295 ரன்களை அடித்தார். அதில், 2 அரை சதங்களும் அடங்கும். மிடில் வரிசையில் நிலைத்து நின்று ஆடும் பேட்டராக இருக்கிறார். இதனால்தான், இனி இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

மறுபக்கம் ருதுராஜ் கெய்க்வாட்டின் நிலைமைதான் பரிதாபம். இவர், ஐபிஎல் 2026 சீசனில் 123 ஸ்ட்ரைக் ரேட்டில்தான் ஆடியிருக்கிறார். மேலும், பவர் பிளேவில் அடித்து ஆடாமல் செட்டில் ஆகிவிட்டு, பிறகுதான் அதிரடி காட்டுகிறார். இதனால், அவர் ஏலத்திற்கு சென்றால், 5 கோடியை பெறுவதே கஷ்டம்தான்.

மேலும், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அடுத்த கேப்டனாக ஆயுஷ் மாத்ரேவை சிஎஸ்கே நிர்வாகம் தேர்வு செய்துள்ளதாம். ஐபிஎல் 2027 சீசனின் முதல் சில போட்டிகளில் சிஎஸ்கே சொதப்பினாலே, அப்படியே ருதுராஜ் கெய்க்வாட்டை ஓரங்கட்டிவிட்டு, ஆயுஷ் மாத்ரேவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், ஏலத்தில் ஹேரி ப்ரூக்கை வங்கி, ஆயுஷ் மாத்ரேவுடன் ஓபனராக ஆட வைக்கவும் சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.

Source link