CSK – வாஷிங்டன் சுந்தரை வாங்க, புது திட்டத்தை செயல்படுத்த தோனி முடிவு: வேற வழியே இல்ல – csk new tactics to get washington sundar in ipl 2027 trading

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மீண்டும் டிரேடிங் விஷயத்தில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அனுப்ப மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தீவிரம் காட்டும் நிலையில், சிஎஸ்கேவுக்குதான் செல்வேன் என ஹர்திக் அடம்பிடிக்கிறாராம். இதனால், மீண்டும் சிஎஸ்கேவிடம் பேச்சு வார்த்தை நடத்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.

அதேநேரத்தில், வாஷிங்டன் சுந்தரை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பேச்சு வார்த்தை நடத்தியபோது, குஜராத் டைடன்ஸ் நிர்வாகம், எந்த பதிலையும் கூறாமல்தான் இருந்தது. குறிப்பாக, சுந்தருக்கு மாற்றாக சர்பரஸ் கான் அல்லது உர்வில் படேல் இருவரில் ஒருவரை வாங்கிக் கொள்ளுங்கள் என தெரிவித்தபோதும், குஜராத் டைடன்ஸ் அணி நிர்வாகம், அமைதி காத்தது.

இந்நிலையில், வாஷிங்டன் சுந்தரை வாங்க தற்போது சிஎஸ்கே நிர்வாகம் புது திட்டத்தை கையில் எடுத்துள்ளது. சுந்தரை அழைத்து பேசி, டாப் ஆர்டரில் பேட்டிங் இடம், பந்துவீச்சிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வாக்குறுதி கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். குஜராத் டைடன்ஸ் அணியில் சுந்தர், சாய் கிஷோர், மனவ் சுதார், ரஷித் கான் போன்ற தரமான ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். இதனால், இவர்களில் யார் பிளேயிங் 11 வாய்ப்பினை பெற்றாலும், அவர்கள் தொடர்ச்சியாக ஆபரமாக ஆட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஒருவேளை, ஒருசில போட்டிகளிலும் சொதப்பினாலும், அடுத்து மற்ற ஆல்ரவுண்டருக்கு வாய்ப்பு கொடுக்க முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது.

இதனால், நிரந்தர வாய்ப்பு கிடைக்கும் சிஎஸ்கேவுக்கு செல்லதான் வாஷிங்டன் சுந்தர் விரும்புவாம். இவர், டிரேடிங்கில் வெளியேற விரும்புகிறேன் எனத் தெரிவித்தால், விடுவிக்கவே அதிக வாய்ப்புள்ளது. இதனால், சுந்தரிடம் நேரடியாக பேச சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம். தற்போது, ஹர்திக் பாண்டியாவும் இதேபோல்தான், சிஎஸ்கேவுக்குதான் செல்வேன் என ஒற்றை காலில் நிற்கிறார்.

சிஎஸ்கேவுக்கு, இந்த இரண்டு ஆல்ரவுண்டர்கள் வந்தாலே அணி முழுமை பெற்றுவிடும். இதனால், ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில், இந்த இரண்டு வீரர்களை வாங்குவதற்கு, முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மேலும், ஐபிஎல் 2027 சீசனுக்கான ஏலத்தில், எப்படியாவது ஹேரி ப்ரூக்கை வாங்கியாக வேண்டும் எனவும் சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாம். இப்படி, இந்த மூன்று பெரிய வீரர்களை வாங்க மட்டுமே சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கிடைத்த அக்சர் படேல்: ரிஷப் பந்தை வாங்கி, கேப்டனாக நியமிக்க முற்படும் டெல்லி கேபிடல்ஸ் மீது கடும் அதிருப்தியில் அக்சர் படேல், டிரேடிங்கில் வெளியேறும் முடிவில் இருக்கிறார். இருப்பினும், இவருக்கு 32 வயதாவதால், இவரை வாங்க சிஎஸ்கே தயங்குகிறது. அடுத்த சீசனுக்கு முன் 33 வயதாகிவிடும்.

ஆகையால், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடத்திற்கு இளம் வீரரை தேர்வு செய்ய சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது. ஒருவேளை, அக்சர் படேல் டிரேடிங்கில் கிடைத்தால், அவருக்கு மாற்றாக அகில் ஹோசைன், ராகுல் சஹார் ஆகியோரை விடுவிக்க சிஎஸ்கே நிர்வாகம் தயாராக இருக்கிறது. அப்படி, அக்சர் படேல், சுந்தர் இருவரையும் வாங்கினால், இதில், சுந்தருக்குதான் ரெகுலர் வாய்ப்பு கிடைக்கும். இதனால், எப்படி பார்த்தாலும் அக்சரை வாங்க வேண்டிய தேவை இல்லை என்ற நிலைமை இருக்கிறது.

Source link