Duleep Trophy Final – சௌத் ஜோன் அணிக்கு கடும் பின்னடைவு: தனியாளாக போராடும் திலக் வர்மா – east zone team has more winning chance than south zone in duleep trophy final 2026

துலீப் டிராபி 2026 தொடரின் இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற ஈஸ்ட் ஜோன் அணி, முதல் இன்னிங்ஸில் 708/10 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தது. அந்த அணிக் கேப்டன் இஷான் கிஷன், 334 பந்துகளில் 30 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 270 ரன்களை குவித்து அசத்தினார்.

சௌத் ஜோன் இன்னிங்ஸ்: இதனைத் தொடர்ந்து, தற்போது சௌத் ஜோன் அணி, முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடி வருகிறது. இதில், எந்த பேட்டரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஓபனர் ரிக்கி புய் 18 பந்துகளில் ஒரேயொரு ரன்னை மட்டும் எடுத்து அவுட் ஆன நிலையில், மற்றொரு ஓபனர் ஜெகதீசன் 42 பந்துகளில் 6 பவுண்டரி உட்பட 32 ரன்களை சேர்த்தார்.

அடுத்து, பார்மில் இருக்க கூடிய தேவ்தத் படிக்கல், நம்பிக்கையளிக்கும் வகையில் சிறப்பாக விளையாட ஆரம்பித்த நிலையில், இவர், 104 பந்துகளில் 4 பவுண்டரி உட்பட 62 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இவர், பெரிய ஸ்கோரை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரை சதம் அடித்ததும் நடையைக் கட்டினார்.

பிறகு, ஷேக் ரஷித் 27 (48), ஸ்மரன் ரவிச்சந்திரன் 23 (55) ஆகியோர் சொதப்பிய நிலையில், கேப்டன் திலக் வர்மா 133 பந்துகளில் 5 பவுண்டரி உட்பட 56 ரன்களை எடுத்து விளையாடி வருகிறார். இவருடன் மிலிந்த் 2 (4) களத்தில் இருக்கிறார். மூன்றாவது நாளின் கடைசி நேரத்தில், ஷ்ரேயஸ் கோபால் 26 (79) அவுட் ஆகி சொதப்பினார்.

தற்போது, சௌத் ஜோன் அணி, 242/6 ரன்களை எடுத்து, 466 ரன்கள் பின்தங்கியிருக்கும் நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஈஸ்ட் ஜோன் அணிக்கே வெற்றி வாய்ப்பு: துலீப் டிராபி உட்பட இந்திய உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில், நாக்அவுட் சுற்றில் டிரா என்பதே கிடையாது. ஆட்டம் டிரா ஆகும்போது, முதல் இன்னிங்ஸில் எந்த அணி பெரிய ஸ்கோரை அடித்திருந்ததோ, அந்த அணிதான் வென்றதாக அறிவிக்கப்படும். தற்போது, ஈஸ்ட் ஜோன் அணி, 708/10 ரன்களை அடித்துள்ளதால், அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

கடைசி 2 நாட்களில், சௌத் ஜோன் அணி, 466 ரன்களை அடித்து, பிறகு, ஈஸ்ட் ஜோன் அணி பேட்டிங் ஆடி, பிறகு சௌத் ஜோன் அணி 2ஆவது இன்னிங்ஸ், இலக்கை துரத்தி வெற்றியைப் பெறுவது என்பதெல்லாம், துளி கூட நடக்க வாய்ப்பே இல்லை.

இதனால், மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவிலேயே ஈஸ்ட் ஜோன் அணி, கிட்டதட்ட வென்றுவிட்டதாக கருதப்படுகிறது.

ஈஸ்ட் ஜோன் அணியில், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த முகமது ஷமி, அபாரமாக பந்துவீசி, 11 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார். முகேஷ் குமாரும், 12 ஓவர்களில் 36 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை சாய்த்தார். இப்படி, இரண்டு பௌலர்களும், துவக்கத்தில் இருந்தே அபாரமாக பந்துவீசி அழுத்தங்களை ஏற்படுத்தியதால்தான், சௌத் ஜோன் அணியால் பெரிய ரன்களை அடிக்க முடியவில்லை.

Source link