பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பாகிஸ்தான் இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், சௌத் ஷகில் 43 (47) மட்டுமே பெரிய ரன்களை அடித்தார். முதல் 7 பேட்டர்களில், சௌத் ஷகில் மட்டுமே இரட்டை இலக்கை ரன்களை அடிக்க முடிந்தது. மற்ற பேட்டர்கள் படுமோசமாக சொதப்பியதால், பாகிஸ்தான் அணி, தனது முதல் இன்னிங்ஸில் 133/10 ரன்களை மட்டுமே எடுத்தது.
ஜோஷ் டங் 4 விக்கெட்களையும், ஆலி ராபின்சன் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இங்கிலாந்து இன்னிங்ஸ்: அடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி, ரன்களை குவித்து அசத்தியது. எமிலியோ ஹெய் 60 (114), ஹேரி ப்ரூக் 75 (97), டான் லாரன்ஸ் 65 (82), ஜேமி ஸ்மித் 69 (84), ஆலி ராபின்சன் 50 (47), ஜோப்ரா ஆர்ச்சர் 32 (27) ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 453/10 ரன்களை எடுத்து அசத்தியது.
பாகிஸ்தான் அணி பௌலர் ரசவுல்லா 23 ஓவர்களில் 148 ரன்களை வாரி வழங்கி, 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
பாகிஸ்தான் இன்னிங்ஸ்: 320 ரன்கள் பின்னடைவுடன் 2ஆவது இன்னிங்ஸ் துவங்கிய பாகிஸ்தான் அணி, ஒரு ரன்னை கூட எடுக்காமல் 2 விக்கெட்களை இழந்து சொதப்பியது. சைம் அயுப், அப்துல்லா சபிக் ஆகியோர் அடுத்தடுத்து டக்அவுட் ஆன நிலையில், அதன்பிறகு, பாகிஸ்தான் அணி அதிரடி கம்பேக்கை கொடுத்தது.
ஓபனர் அசான் அவைஸ் 59 (84), ஷான் மசூத் 95 (148) ஆகியோர் சிறப்பாக விளையாடிய நிலையில், கேப்டன் பாபர் அசாமும் 103 பந்தில் 76 ரன்களை சேர்த்து அசத்தினார்.
தற்போது, சௌத் ஷகீல் 29 (56), ஹாசி ஹோரி 6 (10) ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். பாகிஸ்தான் அணி, 297/5 ரன்களை எடுத்து, 23 ரன்கள் பின்தங்கியிருக்கும் நிலையில், மூன்றாவது நாள், 2ஆவது செஷன் முடிந்துள்ளது.
இங்கிலாந்து அணி வெற்றி வாய்ப்பு : இங்கிலாந்து அணிக்கு, பாகிஸ்தான் அணி கிட்டதட்ட 250 ரன்களையாவது இலக்காக நிர்ணயம் செய்தால்தான், பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும். அதுவும் உறுதியாக சொல்ல முடியாது. தற்போதைய சூழ்நிலையில், பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தாலே, அது பெரிய விஷயம்தான். இதனால், இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
பாகிஸ்தான் அணி அவுட்: ஒருவேளை, மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2027 பைனல் வாய்ப்பை இழக்கும் முதல் அணியாக பாகிஸ்தான் அணி இருக்கும். இப்போட்டியில் இங்கிலாந்து அணி வென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில், 38.54 சதவீத புள்ளிகளுடன் இருக்கும்.
இங்கிலாந்து அணி, இப்போட்டிக்கு முன்புவரை மொத்தம் 16 போட்டிகளில் 7 வெற்றிகளையும், 8 தோல்விகளையும், ஒரு டிராவையும் சந்தித்துள்ளது. தற்போது வென்றால், 8 வெற்றி, 8 தோல்விகளுடன் இங்கிலாந்து அணி இருக்கும். ஒரு போட்டியில் டிரா செய்துள்ளனர். ஓவர் ரேட் பிரச்சினை காரணமாக, இதுவரை இங்கிலாந்து அணிக்கு 12 புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளதால்தான், வெற்றி சதவீதம் குறைந்துள்ளது.
