ENG vs PAK 3rd Test – இங்கிலாந்து மெகா வெற்றி: இனி பாக்கி, இங்கிலாந்தின் WTC பைனல் வாய்ப்பு எப்படி? – england and pakistan team wtc 2027 final chance after 3rd test

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று, இத்தொடரை 0-3 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இத்தொடர் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்புகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

இங்கிலாந்து அணி வாய்ப்பு: இங்கிலாந்து டெஸ்ட் அணி, 17 போட்டிகளில் விளையாடி, 8 வெற்றிகளையும், ஒரு டிராவையும் சந்தித்து 42.16 சதவீத புள்ளிகளுடன் இருக்கிறது. ஓவர் ரேட் காரணமாக 14 புள்ளிகளை இழந்துவிட்டனர். இல்லையென்றால், 50 சதவீத புள்ளிகள் வரை கிடைத்திருக்கும்.

இங்கிலாந்து அணிக்கு இனி 2 டெஸ்ட் தொடர்கள் இருக்கிறது. டிசம்பர் மாதம் நடுபகுதியில் தென்னாப்பிரிக்க மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். அடுத்து, பிப்ரவரி மாதம், வங்கதேசம் சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளார்கள்.

இந்த 5 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வென்றால், 23 போட்டிகளில் 13 வெற்றிகள், ஒரு டிராவுடன் இங்கிலாந்து அணி இருக்கும். இறுதியில், அதிகபட்சமாக 53 சதவீத புள்ளிகளை மட்டுமே பெற முடியும் என்பதால், இங்கிலாந்து அணிக்கு பைனல் வாய்ப்பு மிகமிக குறைவுதான். இனி ஒரு டெஸ்டில் டிரா செய்தாலும் வெளியேறிவிடுவார்கள். பொதுவாக 60 சதவீத புள்ளிகளுக்கு மேல் பெறும் அணிகளுக்கே பைனல் வாய்ப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி வாய்ப்பு: பாகிஸ்தான் டெஸ்ட் அணி, இதுவரை 10 போட்டிகளில் விளையாடி, 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. 13.33 சதவீத புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் இருக்கிறது. அடுத்து, இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட், நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட்போட்டிகள் இருக்கிறது. இந்த 4 போட்டிகளும் பாகிஸ்தான் மண்ணில்தான் நடைபெறும். இந்த 4 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வென்றாலும், 14 போட்டிகளில் 6 வெற்றிகளை மட்டுமை பெற்று, 50 சதவீத புள்ளிகளுக்கும் குறைவான புள்ளிகளை மட்டுமே பெறுவார்கள். இதனால், பாகிஸ்தான் அணிக்கு, பைனல் வாய்ப்பு சுத்தமாக கிடையாது.

மூன்றாவது டெஸ்ட் ஸ்கோர் விபரம்: மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், பாகிஸ்தான் அணி, 133/10 ரன்களை அடித்த நிலையில், இங்கிலாந்து அணி, 453/10 ரன்களை அடித்து மெகா முன்னிலையை பெற்றது.

இதனால், பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் எனக் கருதப்பட்ட நிலையில், அதிரடி கம்பேக்கை கொடுத்து 449/10 ரன்களை குவித்து அசத்தியது. இறுதியில், 2ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, 130/2 ரன்களை எடுத்து, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

இந்த, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹேரி ப்ரூக், 3 போட்டிகளில் 215 ரன்களை அடித்து, முதல் இடத்தை பிடித்தார். இங்கிலாந்து பௌலர் ஆலி ராபின்சன், 3 போட்டிகளில் 2.04 எகனாமியில் 21 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ஜோஷ் டங்கும் 3 போட்டிகளில் 19 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதனால், ஆலி ராபின்சனுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. பாகிஸ்தான் பௌலர் முகமது அப்பாஸ், 3 போட்டிகளில் 13 விக்கெட்களையும், 3 போட்டிகளில் 86 ரன்களையும் எடுத்து அசத்தியதால், இவருக்கும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

Source link