இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 194 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி, பெர்மிங்கம்மில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பாகிஸ்தான் இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், சௌத் ஷகீல் மட்டுமே சிறப்பாக செயல்பட்டார். இவர், 47 பந்துகளில் 7 பவுண்டரி உட்பட 43 ரன்னை சேர்த்த நிலையில், மற்ற எந்த பேட்டரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சைம் அயுப் 0 (10), அசான் அவைஸ் 9 (20), பாபர் அசாம் 7 (18), ஷான் மசூத் 5 (7) போன்றவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், 10ஆவது இடத்தில் ஆடிய முகமது அப்பாஸ் 36 பந்தில் 21 ரன்களை எடுத்து, ஓரளவுக்கு ஸ்கோரை உயர்த்தினார்.
இப்படி, முக்கிய பேட்டர்கள் தொடர்ச்சியாக சொதப்பியதால், பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 133/10 ரன்களை மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து அணி பௌலர் ஜோஷ் டங்க், 10 ஓவர்களில் 42 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். ஆலி ராபின்சன், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
இங்கிலாந்து இன்னிங்ஸ்: அடுத்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இங்கிலாநுத அணியில், ஓபனர் பென் டக்கெட் 11 (15) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் அவுட் ஆன நிலையில், மற்றொரு ஓபனர் எமிலியோ ஹெய் 114 பந்துகளில் 60 ரன்களை சேர்த்து அசத்தினார்.
அடுத்து, ஒன்டவுட் பேட்டர் ஜோர்டன் கக்ஸ் 4 (6), கேப்டன் ஜோ ரூட் 8 (18) ஆகியோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், பிறகு, ஹேரி ப்ரூக் 75 (97), டான் லாரன்ஸ் 65 (82), ஜேமி ஸ்மித் 69 (84) ஆகியோர் அடுத்தடுத்து அரை சதம் அடித்து அசத்தினார்கள். பிறகு, இறுதிக் கட்டத்தில் 9ஆவது இட பேட்டர் ஆலி ராபின்சன் 47 பந்தில் 50 ரன்களை அடித்த நிலையில், ஜோப்ரா ஆர்ச்சர் 27 பந்தில் 32 ரன்களை சேர்த்தார். இதனால், இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 453/10 ரன்களை எடுத்து, 320 ரன்கள் முன்னிலை பெற்றது.
ரசாயுல்லா 23 ஓவர்களில் 6.4 எகனாமியில் 148 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். முகமது அலி மற்றும் முகமது இம்ரான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் அணி, இனி இந்த 320 ரன்களை அடித்து, பிறகு இங்கிலாந்து அணிக்கு இலக்கை நிர்ணயிக்கவும் ரன்களை அடிக்க வேண்டும். இதனால், பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது மிகமிக குறைவாக இருக்கிறது. இப்போட்டியிலும், பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
