ENG vs PAK Test – கிரிக்கெட் சூதாட்ட புகார்: 2 ஸ்டார் பாகிஸ்தான் வீரர்களுக்கு வாழ்நாள் தடை? – match fixing concerns in pakistan team during england visit for 3 match test series

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது போட்டியில், இங்கிலாந்து அணி 194 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அடுத்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, பெர்மிங்கம்மில் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7 வீரர்கள் நீக்கம்: இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சொதப்பிய, தொடரை இழந்ததால், முகமது ரிஸ்வான், சல்மான் அலி கான், இமாம் உல் ஹக், அலி உஸ்மான், குர்ரம் ஷசாத், ஆமிர் ஜமால், முகபது அவைஸ் ஜாபர் ஆகிய 7 வீரர்களை நீக்கிவிட்டனர். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 7 வீரர்களில், 5 வீரர்கள் புதுமுக வீரராக இருக்கிறார். சைம் அயுப், அப்துல்லா பசல் ஆகியோர் மட்டுமே இதற்குமுன் பாகிஸ்தான் அணிக்காக ஆடியவர்களாக இருக்கிறார்கள்.

காரணம் தெரிந்தது: 7 வீரர்களை நீக்கியது, கிரிக்கெட் உலகில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த 7 பேரில் 2 பேர் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கியதால்தான், பாகிஸ்தானுக்கு அனுப்பிவிக்கப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. முகமது ரிஸ்வான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர்தான், கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கியுள்ளர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின், பாதுகாப்பு அலுவலர்கள் ரிஸ்வான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோரது செல்போன்களை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கு உரிய செயல்பாடுகள் தெரிய வந்திருக்கிறது. இதனால், அவர்களையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என சந்தேகிக்கப்பட்ட மேலும் 5 வீரர்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எப்படி சந்தேகம் வந்தது? இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்ஸ்களிலும் இமாம் உல் ஹக் பேட்டிங் ஆட வரவில்லை. தசை பிடிப்பு பிரச்சினை எனக் கூறி, இரண்டு இன்னிங்ஸிலும் பேட்டிங் ஆடவில்லை. ஆனால், இமாம் உல் ஹக்கிற்கு அவ்வளவு பெரிய தசை பிடிப்பு பிரச்சினை ஏற்படவில்லை என, அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்துதான், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய பாதுகாப்பு அலுவலர்களுக்கு, இமாம் உல் ஹக் மீது சந்தேகம் எழுந்திருக்கிறது. இவரும், ரிஸ்வானும் அவ்வபோது தனியாக அமர்ந்து பேசியதையும், பாதுகாப்பு அலுவர்கள் நோட்டமிட்டிருக்கிறார்கள்.

பிறகு, இப்போட்டி முடிந்த உடனே இருவரையும் தனிமைபடுத்தி, இருவரது செல்போனையும் ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போது, சில சேட்கள், இரண்டு போன்களிலும் ஒரே மாதிரி அழிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, இவர்களுடன் தொடர்பில் இருந்தவர் என சந்தேகிக்கப்பட்ட மேலும் 5 வீரர்களும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்த 5 பேரின் செல்போன்களிலும், சந்தேகத்திற்கு உரிய எதுவும் இடம்பெறவில்லை.

இவர்களில், இமாம் உல் ஹக் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் விசாரணைக்காக ஆஜராகி வருகிறார்கள். விரைவில், இதுகுறித்த அறிக்கையை ஐசிசிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுப்பும். இருவர் செய்த குற்றம் உறுதியாகும் பட்சத்தில், அடுத்த 10 வருடங்களுக்கு தடை செய்யப்பட வாய்ப்புள்ளது. அடுத்து, இவர்களால் கிரிக்கெட்டே ஆட முடியாது. இதனால், இது வாழ்நாள் தடைக்கு சமமான தண்டனையாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Source link