இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக வருவதற்கு முன்பு, கௌதம் கம்பீர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்பட்டார். அப்போது, அந்த அணிக்கு ராணா சிறப்பாக பந்துவீசி, கம்பீரை கவர்ந்த நிலையில், கம்பீர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றதும், ராணாவுக்கு உடனே இந்திய அணியில் இடம் வழங்கப்பட்டது.
முதலில் டி20 பார்மெட்டில் மட்டும் ஆடிய ஹர்ஷித் ராணா, பிறகு, படிப்படியாக மூன்று பார்மெட்டிலும் ஆடும் வீரராக மாறினார். குறிப்பாக, ஒருகட்டத்தில், இந்திய அணிக்காக மூன்று பார்மெட்டிலும் பந்துவீசும் ஒரே பௌலராக ராணா திகழ்ந்தார். இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது ராணா காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறனார். சமீபத்தில், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம்பெற்ற ஹர்ஷித் ராணா, 3ஆவது போட்டியில் விளையாடியபோது, காயம் காரணமாக அவதிப்பட்டார்.
தற்போது, ராணாவுக்கு பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்து வரும் நிலையில், ராணாவின் பிட்னஸ் குறித்து, தேசிய கிரிக்கெட் அகடமி மருத்துவர்களிடம், பிசிசிஐ நிர்வாகிகள் அறிக்கை கேட்டனர்.
இந்நிலையில், தற்போது மருத்துவ அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில், ’‘ராணாவுக்கு ஏற்பட்டுள்ள காயம், சாதாரணமானது கிடையாது. அதிக எடை காரணமாகதான், ராணாவுக்கு தசை பிடிப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவர், தனது உடல் எடையை குறைக்கவில்லை என்றால், அவருக்கு அடிக்கடி தசை பிடிப்பு பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும்’’ என அந்த மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
கம்பீர் மீது அதிருப்தி: இந்நிலையில், ஹர்ஷித் ராணாவுக்கு தொடர்ச்சியாக அதிக வாய்ப்புகளை கொடுத்து, அவரை சிறந்த பௌலிங் ஆல்ரவுண்டராக உருவாக்க வேண்டும் என ராணாவுக்கு தொடர்ச்சியாக ஆதரவாக பேசிய, தலைமை பயிற்சியாளர் கம்பீரை அழைத்து, இதுகுறித்து பிசிசிஐ பேசியிருக்கிறது.
ராணா ஏற்கனவே, தொடர்ச்சியாக அதிக ரன்களை விட்டுக்கொடுக்கும் பௌலராக இருக்கிறார். தற்போது, உடல் எடை பிரிச்சினையும் சேர்ந்துள்ளது. இப்படிப்பட்ட வீரருக்கு தொடர்ச்சியாக பரிந்துரை வழங்கியது எப்படி? தலைமை பயிற்சியாளராக இருந்துகொண்டு, இந்த குறையை கூட, உங்களால் எப்படி சிந்தித்து பார்க்க முடியாமல் இருந்தது.
இனியும், ராணாவுக்காக எந்த பரிந்துரையும் செய்யக் கூடாது. ராணா, தனது உடல் எடையை குறைத்தப் பிறகு, மீண்டும் உள்ளூர் பார்மெட்டில் சிறப்பாக செயல்பட்ட பிறகுதான், அணித் தேர்வில் அவரை சேர்ப்பது குறித்து யோசிக்க வேண்டும் என தேர்வுக்குழுவுக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாம்.
பிரின்ஸ் யாதவுக்கு ஜாக்பாட்? இந்நிலையில், ஹர்ஷித் ராணா இடத்தில் இனி பிரின்ஸ் யாதவை தொடர்ச்சியாக விளையாட வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரின்ஸ் யாதவ், தொடர்ச்சியாக சரியான லைன், லைந்தில் பந்துவீசி வருவதால், இவரை மூன்று பார்மெட்டிலும் பயன்படுத்துவது குறித்து தேர்வுக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால், இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட ்தொடரில், பிரின்ஸ் யாதவை தேர்வு செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி ஆகியோர் காயம் காரணமாக அவதிப்படுவதால், இவர்களை தேர்வு செய்ய வாய்ப்பு குறைவு எனத் தகவல் வெளியாகி உள்ளது.
