ஆசையாக சமைத்துக் கொடுத்த கார்த்திக்… உண்மையை போட்டுடைக்க காத்திருக்கும் சந்திரகலா! – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று காதல், பாசம், பதற்றம் என கலவையான உணர்வுகளுடன் ரசிகர்களை கட்டிப்போடப் போகும் காட்சிகள் இடம்பெறவுள்ளன. சாமுண்டீஸ்வரி வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கார்த்திக், ரேவதியை வெளியே அழைத்துச் செல்கிறான். இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்த சந்திரகலாவுக்கு உடனே சந்தேகம் கிளம்ப, சிவனாண்டியிடம் தகவல் சொல்லி இருவரையும் பின் தொடர முடிவு செய்கிறாள்.
ஆனால் அங்கே நடந்ததை பார்த்து அவர்களுக்கே அதிர்ச்சி ஆகியுள்ளது. ரேவதியை தனது வீட்டிற்கு அழைத்து வரும் கார்த்திக், அவளுக்காக தனது கையாலேயே ஆசையாக சமைத்து பரிமாறுகிறான். ரேவதியும் அந்த அன்பை ரசித்து மகிழ, ஜன்னல் வழியாக இவற்றை பார்த்த சந்திரகலா மற்றும் சிவனாண்டி, இருவருக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தை புரிந்துகொள்கின்றனர். இதோடு நிற்காமல், இந்த விஷயத்தை சாமுண்டீஸ்வரியின் காதில் போட்டு பெரிய பூகம்பத்தை கிளப்ப வேண்டும் என்று சந்திரகலா திட்டம் போடுகிறாள்.
இதற்கிடையில், மனதை நெகிழ வைக்கும் ஒரு தருணமும் அரங்கேறுகிறது. கார்த்திக் தனது திருமண ஆல்பத்தை ரேவதியிடம் காட்ட, அந்த புகைப்படங்களை பார்த்த ரேவதி திடீரென சோகமாக மாறுகிறாள். “ஏன் மாமா… நான் சோகமா இருக்கேன்?” என்று கேட்கும் ரேவதியிடம், தங்களது திருமணத்தின் போது நடந்த கஷ்டங்கள், பிரச்சினைகள், எதிர்பாராத திருப்பங்கள் அனைத்தையும் கார்த்திக் நினைவுகூர்கிறான்.
கார்த்திக்கின் மனவேதனையை உணர்ந்த ரேவதி, அவனது மடியில் சாய்ந்து ஆறுதல் தேடுவது காட்சிக்கு கூடுதல் உணர்ச்சி சேர்க்கிறது. மறுபக்கம் வீட்டிற்கு திரும்பிய சந்திரகலா, கார்த்திக் – ரேவதி தொடர்பான உண்மையை சாமுண்டீஸ்வரியிடம் சொல்ல சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறாள். சந்திரகலா சொல்லப் போகும் தகவல் வீட்டில் புதிய பிரச்சினையை உருவாக்குமா? கார்த்திக் – ரேவதியின் நெருக்கம் சாமுண்டீஸ்வரிக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும்? சந்திரகலாவின் திட்டம் வெற்றிபெறுமா, இல்லை கடைசி நேரத்தில் ஏதாவது திருப்பம் உண்டாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காதலுக்காக கலக்கிய கர்ணா… இந்துவை கையில் தூக்கி வெற்றியை தட்டிச் சென்றாரா? – *சின்னஞ்சிறு கிளியே* இன்றைய எபிசோட் அப்டேட்
சின்னஞ்சிறு கிளியே சீரியலில் இன்று காதல், காமெடி, கியூட் ரொமான்ஸ் என ரசிகர்களை கவரும் சுவாரஸ்யமான காட்சிகள் அரங்கேற இருக்கின்றன. மனைவியை கண்டுபிடிக்கும் போட்டியில் பெண்கள் வரிசையாக நிற்க, இந்து அங்கே இல்லாததை கர்ணா ஏற்கனவே சரியாக கண்டுபிடித்து அசத்தியிருந்தான். அதனைத் தொடர்ந்து இந்துவை வரிசையில் நிற்க வைக்க, கர்ணா அவளது கையை உறுதியாக பிடித்து, “இதுதான் என் இந்து!” என்று சரியாக பதில் சொல்லி போட்டியில் வெற்றி பெறுகிறான். இதைப் பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்குகின்றனர்.
ஆனால் அதுவே ஆரம்பம் தான்! அடுத்ததாக, கணவர்கள் தங்களது மனைவியை தூக்கிக்கொண்டு தடைகளை தாண்டி இலக்கை அடைய வேண்டும் என்ற கடினமான போட்டி அறிவிக்கப்படுகிறது. மற்ற போட்டியாளர்கள் தடுமாற, கர்ணாவோ இந்துவை பத்திரமாகத் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு தடையையும் அசால்ட்டாக கடந்து சென்று மீண்டும் வெற்றிக் கோப்பையை தட்டிச் செல்கிறான். கர்ணாவின் காதலும் நம்பிக்கையும் அங்கே அனைவரின் பாராட்டையும் பெறுகிறது.
மறுபக்கம், கிருபாவுடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் சுகுணா, “பிரியாணி சாப்பிடணும்னு ஆசைப்பட்டேன்… ஆனா என்னை அவமானப்படுத்திட்டாரு!” என்று வருத்தப்படுகிறாள். உடனே ஜெயந்தி களத்தில் இறங்கி, திவாகரனுக்கு போன் போட்டு பிரியாணி கேட்கிறாள். முதலில் திவாகரன் கோபப்பட்டாலும், “எனக்கில்லை… உங்க பையனுக்குத்தான்!” என்று ஜெயந்தி சொல்லியதும் நிலைமை தலைகீழாக மாறுகிறது. அடுத்த நிமிடமே பிரியாணியுடன் வீட்டுக்கு வரும் திவாகரனால், சுகுணா, ஜெயந்தி, சித்ரா மூவரும் செம்ம சந்தோஷமாக பிரியாணியை ரசித்து சாப்பிடுகின்றனர்.
இதற்கிடையில் போட்டியில் வெற்றி பெற்று வீடு திரும்பும் கர்ணா மற்றும் இந்துவுக்கு இடையே ஒரு அழகான மனசுக்குள் காதல் உரையாடல் நடக்கிறது. “நீ மட்டும் உன் அண்ணன்களையெல்லாம் விட்டுட்டு வந்தா தான் உன்னை ஏத்துக்குவேன்!”* என்று இந்து மனதிற்குள் பேச, மறுபக்கம் கர்ணாவோ, எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்… என் அண்ணன்களை தவிர வேற எதை விட்டுட்டு வர சொன்னாலும் கண்டிப்பா செய்வேன்!”* என்று நினைக்கிறான். இருவரின் இந்த அமைதியான காதல் தருணத்தை சித்ரா எண்ட்ரி கொடுத்து பிரியாணியை கையில் கொடுத்து கலைத்து விடுகிறாள்!
கர்ணாவின் காதலை இந்து ஏற்றுக்கொள்ளப் போகிறாளா? இவர்களின் மனசுக்குள் இருக்கும் உணர்வுகள் எப்போது வெளிப்படப் போகிறது? கர்ணா – இந்து உறவில் அடுத்ததாக என்ன திருப்பம் காத்திருக்கிறது? என்பது குறித்து கேள்விகள் சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சமையலில் அசத்திய சாமந்தி.. திட்டம் போட்ட அரசிக்கு அதிரடி பதிலடி!
சாமந்தி சீரியலின் நேற்றைய எபிசோடில், அரசி தனது தோழிகளை வீட்டிற்கு அழைத்து வந்து, தொழிலில் தோல்வியடைந்த தோழியை அவமானப்படுத்தி அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று கதையில் புதிய திருப்பம் ஏற்படுகிறது. வெளிநாட்டு பிசினஸ் பார்ட்னர்கள் வீட்டிற்கு வர இருப்பதாக கூறும் அரசி, பார்வதியை அழைத்து விருந்து ஏற்பாடுகள் குறித்து பல கட்டுப்பாடுகளை விதிக்கிறார்.
சமையல் வழக்கம்போல் இல்லாமல் வித்தியாசமாகவும், சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்றும், அதனை சாமந்தியே சமைக்க வேண்டும் என்றும் கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார். இந்த தகவலை பார்வதி, சாமந்தியிடம் தெரிவிக்கிறார். இதைக் கேட்டு சாமந்தி ஆரம்பத்தில் அதிர்ச்சியடைகிறார். புடவையைத் தொட்டாலே அந்த அம்மா எரிக்கும்.. தன்னால் எப்படி சமையல் செய்ய முடியும் என யோசித்தாலும், சவாலை ஏற்று சிறப்பாக செய்து காட்ட வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
அதன்படி, சாமந்தி சுவையான உணவுகளை தயாரித்து விருந்தினர்களுக்கு பரிமாறுகிறார். அவரது சமையலை அனைவரும் மனதார பாராட்டுகின்றனர். இதனால் கடும் எரிச்சலடையும் அரசி, சாமந்தியை அவமானப்படுத்தும் நோக்கில் உணவில் முடியை போட்டு பிரச்சனை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.
மேலும், கோபத்தின் உச்சத்தில் சாமந்தியை அடிக்க கையை ஓங்கும் அரசியை, மகேந்திரன் தடுத்து நிறுத்துகிறார். நடந்த விஷயம் அனைத்தும் தனக்குத் தெரியும் என்று கூறி அரசிக்கு பதிலடி கொடுக்கிறார். இதனால் அரசியின் திட்டம் முறியடிக்கப்பட்டு அவர் அனைவரின் முன்னிலும் அவமானப்படுகிறார்.
அரசியின் சதித்திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில், அடுத்ததாக சாமந்தியின் வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறது என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
