சென்னை: அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் மேலும் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நேற்றிரவு சரிவை கண்டது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் நடக்கும் மாற்றமே இந்தியாவிலும் எதிரொலிக்கும் நிலையில், இன்று இந்தியாவிலும் தங்கம் விலை குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.800 குறைந்து, ரூ.1,07,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை சீராக குறைந்து வருகிறது. இடையில் சில நாட்கள் அதிகரித்தாலும் கூட ஒட்டுமொத்தமாக சில மாதங்களில் தங்கத்தின் டிரெண்ட் இறங்குமுகமாகவே இருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவதே இதற்கு காரணமாக இருக்கிறது.
நேற்றைய தினமும் கூட சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்தே இருந்தது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.3% குறைந்து 4,125.90 டாலராக இருந்தது. அமெரிக்க டிசம்பர் மாதத்துக்கான கோல்ட் ப்யூச்சர்ஸ் 0.4% சரிந்து, ஒரு அவுன்ஸ் 4,142.60 டாலரில் வர்த்தகமானது..
தற்போது தங்கத்தின் விலையை பாதிக்கும் முக்கிய அம்சங்களாக பணவீக்கமும் அமெரிக்காவின் வட்டி விகித கொள்கையும் இருக்கிறது. பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தைவிட, தற்போதைய சூழலில் அமெரிக்க அரசு பத்திரங்களில் முதலீடு செய்யவே முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதன் காரணமாகவே தங்கம் விலை சரிந்து வருகிறது.
கடந்த செப்டம்பரில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது. இந்த ஆண்டில் வட்டி உயர்த்தப்பட்டது அதுவே முதல் முறையாகும். அடுத்த கூட்டம் வரும் அக்டோபர் 27, 28 தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் வட்டி உயர்வு அறிவிக்கப்படுமா என்பது குறித்து எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. இந்த மாதம் வட்டி விகிதம் ஏறவில்லை என்றாலும் டிசம்பரில் ஏறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால் ஒட்டுமொத்தமாக தங்கம் விலை மேலும் சரியவே வாய்ப்பு அதிகம்.
கடந்த ஜனவரி மாதம் சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 5,594.82 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. தற்போது அந்த அளவிலிருந்து சுமார் 26% சரிந்துள்ளது. ஈரான் போர் தொடங்கிய காலத்தில் இருந்த விலையுடன் ஒப்பிடும்போதும் தங்கம் சுமார் 22% குறைந்துள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு தங்கத்தின் சரிவு தொடரவே போகிறது. ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்த அளவுக்கு இந்தியாவில் சரியவில்லை. இருப்பினும், கணிசமான அளவு சரிந்துள்ளது.
நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து, ரூ.1,07,920க்கு விற்கப்பட்டது. அதேபோல கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,490க்கு விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே சென்னையில் இன்று தங்கம் விலை சரிந்தது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.800 குறைந்து, ரூ.1,07,120க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.100 குறைந்து, ரூ.13,390 விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.230க்கு விற்கப்படுகிறது.
21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,07,120
20-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,07,920
19-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,560
18-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,280
17-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,280
16-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,120
15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,120
14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,720
