Gold Rate Today: இப்போது தங்கம் வாங்கலாமா.. விலை சுழற்றி சுழற்றி அடிக்குதே.. மக்களே கவனம்!

சென்னை: கடந்த வாரம் பெரும்பாலும் இறக்கத்திலேயே வர்த்தகமான தங்கம் விலை, இறுதியில் உயர்ந்தது. சர்வதேச சந்தையில் அமெரிக்க வட்டி விகிதம் பற்றிய அச்சம் காரணமாக தங்கம் விலை பெரியளவில் உயராமல் இருக்கிறது. இதற்கிடையே வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.1,08,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் இப்போது பண்டிகை சீசன் ஆரம்பித்துவிட்டது. நம்ம ஊரில் நல்ல நாள் என வரும்போது தங்கம் வாங்குவார்கள். இந்தாண்டு தங்கம் விலை பெரியளவில் உயராத நிலையில், தங்கம் வாங்க மக்கள் ஓரளவுக்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். சர்வதேச அளவில் தங்கம் விலை உயராமல் இருப்பதே பிரதான காரணமாகும்.

அடுத்து வட்டி விகிதம் இருக்குமா இருக்காது என்பது குறித்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ் எந்தவொரு தெளிவான சிக்னலையும் தரவில்லை. அக்டோபர் மாதம் வட்டி விகிதம் உயர்த்தப்படா வாய்ப்பு குறைவு. இதன் எதிரொலியாக அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்தது. அதாவது அக்டோபர் மாதம் அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை உயர்த்தாது என்பதால் முதலீட்டாளர்கள் தங்கம் வாங்க ஆரம்பத்தில் ஆர்வம் காட்டினர். ஆனால், பணவீக்கம் அதிகரித்து வருவதும், டிசம்பரில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் தங்கத்தின் விலை பெரியளவில் ஏறாமல் பார்த்து கொண்டன.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அக்டோபர் மாதம் வட்டி விகிதம் உயர்த்தப்படாது என்பதால் தங்கம் விலை பெரியளவில் சரியவில்லை.. அதேநேரம் டிசம்பர் மாத கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு அதிகம் என்பதால் தங்கம் விலை அதிகம் ஏறவும் இல்லை. இதன் காரணமாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தோடு தள்ளாடி வருகிறது.

இதனால் சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில், ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,165.42 டாலராக இருந்தது. இது 0.13 சதவீதம் சரிவாகும். அதே நேரத்தில், டிசம்பர் மாத டெலிவரிக்கான கோல்ட் ப்யூச்சர்ஸ் 11 டாலர் உயர்ந்து, அவுன்ஸ் ஒன்றுக்கு 4,181.10 டாலராக இருக்கிறது.

இப்போதைக்கு சர்வதேச சந்தையில் அமெரிக்க பணவீக்கமே முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. வட்டி விகிதங்கள் உயரும்போது, வட்டி வருவாய் தராத தங்கத்தின் மீதான ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது. எனவே அமெரிக்கா வட்டியை குறைக்குமா ஏற்றுமா என்பதை பொறுத்தே தங்கம் விலை இருக்கும்.

கடந்த வாரம் தங்கம் விலை பெரும்பாலும் சரிந்தே வந்தது. வெள்ளிக்கிழமை மட்டும் கொஞ்சம் உயர்ந்தது. வெள்ளிக்கிழமை 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,535க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,280க்கும் விற்பனை விற்பனையானது.

சென்னையில் இன்றைய தினம் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.1,08,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ரூ.13,570க்கு விற்பனை செய்யப்படுகிறது. மறுபுறம் வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.240க்கு விற்கப்படுகிறது.

19-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,560

18-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,280

17-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,280

16-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,120

15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,120

14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,720