Gold Rate Today: மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. 3 நாட்களில் ரூபாய் 1,000 உயர்வு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று (அக்டோபர் 28) ஒரு சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560-க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, கச்சா எண்ணெய் விலை நிலவரம் ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேற்காசிய நாடுகளின் போர் உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை ஒரு லட்சத்தைக் கடந்து விற்பனையாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை சரிவைச் சந்தித்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக உயர்ந்து வருகிறது.

தங்கத்தின் மீதான முதலீடுகள் மேலும் குறைந்தால், இந்திய சந்தையில் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே சரிய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரெப்போ வட்டி உயர்வும் இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தங்கத்தின் விலை அக்டோபர் மாதத்தில் மேலும் சரிய வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,080 குறைந்திருந்தது. சனிக்கிழமை அன்று சவரனுக்கு ரூபாய் 80 அதிகரித்தது. இந்நிலையில், இந்த வாரம் திங்கட்கிழமை சவரனுக்கு ரூபாய் 120 அதிகரித்தது. அக்டோபர் 26 ஆம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் விலை ரூ. 15 உயர்ந்து, ரூ.13,085க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 1,05,080-க்கும் கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 13,135-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 28) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ரூ. 13,195-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 வரை உயர்ந்துள்ளது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.220-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,20,000-க்கு விற்பனையாகிறது.

28-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,05,560

27-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,05,080

26-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,04,680

25-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,04,560

24-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,04,560

23-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,04,480

22-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,05,880

21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,07,120

21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,07,120

20-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,07,920

19-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,560

18-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,280

17-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,280

16-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,120

15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,120

14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,720