GOLDPRICE: தங்கம் வாங்குவோருக்கு ஒரு BAD NEWS…..என்னத…

கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் (10.09.2026)  சவரனுக்கு ரூ 880 அதிகரித்து ஒரு சவரன் ரூ 1,14,040க்கும், கிராமுக்கு ரூ 110 உயர்ந்து ஒரு கிராம் ரூ 14,255க்கும், விற்பனை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று (11.09.2026) காலையில் சவரனுக்கு ரூ 1,920 குறைந்து, ஒரு சவரன் ரூ1,12,112க்கும், கிராமுக்கு ரூ 240 குறைந்து ஒரு கிராம் ரூ 14,015க்கும் விற்பனை செய்யப்பட்டது. காலையில் குறைந்த தங்கத்தின் விலை மாலையில் அதிரடியாக உயர்ந்து சவரனுக்கு ரூ 1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 1,13,240க்கும், கிராமுக்கு ரூ 140 உயர்ந்து ஒரு கிராம் ரூ 14,145 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றும் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.1,13,360க்கும்,  கிராமுக்கு ரூ.15 உயர்ந்து 14,170க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

 

Source link