IND A vs NZ A – நடுவரின் தவறான தீர்ப்பால், 199 ரன்னுக்கு அவுட் ஆன இந்திய பேட்டர்: விபரம் இதோ – due to umpire wrong call devdutt padikkal out in 199 runs in nz a vs ind a test

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய ஏ அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில், நடுவரின் தவறான தீர்ப்பு காரணமாக, இந்திய பேட்டர், 199 ரன்களுக்கு அவுட் ஆனார்.

இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய ஏ அணி ஓபனர்கள் யாஷஸ்வி ஜெய்ஷ்வால், 5 (9), கே.எல்.ராகுல் 4 (15) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில், அடுத்து தேவ்தத் படிக்கல், சாய் சுதர்ஷன் ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். அப்போது, சுதர்ஷன் 184 பந்தில் 12 பவுண்டரி உட்பட 91 ரன்களை அடித்து அவுட் ஆன நிலையில், ஒன்டவுன் பேட்டர் தேவ்தத் படிக்கல் தொடர்ச்சியாக அபாரமாக விளையாடி அசத்தினார்.

படிக்கல், மொத்தம் 248 பந்தில் 24 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 199 ரன்களை எடுத்து அவுட் ஆனார். ஒரு ரன்னில் இரட்டை சதத்தை எட்ட முடியாமல் போனது. இதுக்கு காரணம் நடுவர்தான்.

நடுவரின் தவறான தீர்ப்பு: தேவ்தத் படிக்கல், இரட்டை சதத்தை எட்ட முடியாமல் போனதற்கு தடுவர்தான் காரணம். ஜாக் கிப்சன் வீசிய பந்தை, தேவ்தத் படிக்கல் அடிக்க முயன்றபோது, பந்து பேடில் உரசி சென்று, கீப்பர் கைக்குள் மாட்டிக் கொண்டது. ஆனால், பந்து, பேடில் படாமல், பேட்டில் பட்டு சென்றதாக நினைத்து நடுவர் அவுட் வழங்கினார். இதனால், அதிர்ச்சியடைந்த படிக்கல், நடுவரிடம் முறையிட்டபோதும், நடுவர் அதனை ஏற்கவில்லை.

மேலும், டிஆர்எஸ் விதிமுறையும் கிடையாது என்பதால், படிக்கல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். குறிப்பாக, வீரர்களும் கூட, முழுமனதுடன் அப்பீல் செய்யவில்லை. நடுவரும் சிறிது யோசித்துவிட்டுதான் கையை மேலே உயர்த்தினார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்கோர் விபரம்: இப்போட்டியில், டாஸை இழந்து முதலில் களமிறங்கிய இந்திய ஏ அணியில், எந்த பேட்டரும் அரை சதம் கூட அடிக்கவில்லை. யாஷ் ரதோட் 44 (49), தேவ்தத் படிக்கல் 32 (77) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை அடித்தனர். மற்ற பேட்டர்கள் சொதப்பியதால், இந்திய ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 113/10 ரன்களைதான் அடித்தது.

நியூசிலாந்து ஏ இன்னிங்ஸ்: அடுத்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய நியூசிலாந்து ஏ அணியில், ஓபனர் கேப்டன் மரியு 76 (137), கர்டஸ் ஹெப்பே 44 (134), டீன் போக்ஸ்கர்ப்ட் 51 (79), கிறிஸ்டியன் கிளர்க் 42 (67) ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். இதனால், நியூசிலாந்து ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 317/10 ரன்களை குவித்து, 204 ரன்கள் முன்னிலையை பெற்று அசத்தியது.

இந்திய ஏ, 2ஆவது இன்னிங்ஸ்: அடுத்து, இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய ஏ அணியில், ஜெய்ஷ்வால், ராகுல் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களுக்கு அவுட் ஆன நிலையில், அதன்பிறகு தேவ்தத் படிக்கல் 199 (248), சாய் சுதர்ஷன் 91 (184) ஆகியோர் சிறப்பாக விளையாடி அசத்தினார்கள்.

பிறகு, மிடில் வரிசை பேட்டர் யாஷ் ரத்தோட் 66 (72) அவுட் ஆனப் பிறகு, வாஷிங்டன் சுந்தர் 51 (75) ரன்களை அடித்து களத்தில் இருக்கிறார். இவருடன், ஆகாஷ் தீப்பும் 0 (1) களத்தில் உள்ளார். இந்திய ஏ அணி, 488/8 ரன்களை எடுத்து, 284 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 3ஆவது நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது.

இன்னும், கடைசி நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. இதில், இந்திய அணி டிக்ளேர் அல்லது 300+ ரன்களை எட்டி, நியூசிலாந்து அணியின் 10 விக்கெட்களையும் எடுத்தால்தான் வெல்ல முடியும் என்ற நிலைமை இருக்கிறது.

Source link