IND vs JAP – ஜப்பான் அணிக்காக ஆடப் போகும் சாம்சன், சூர்யவன்ஷி? அதுவும் இந்திய அணிக்கு எதிராக – is sanju samson and vaibhav sooryavanshi play for japan team against india team in a t20 match

ஏசியன் கேம்ஸ் தொடர், ஜப்பானில் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கி, அக்டோபர் 4ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, விரைவில் ஜப்பான் செல்ல உள்ளது.

கடந்த ஏசியன் கேம்ஸ் தொடரில், இந்திய அணி கோப்பை வென்ற நிலையில், தற்போது காலிறுதி ஆட்டத்தில் இருந்து இந்திய அணி விளையாட உள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும், காலிறுதி போட்டியில் இந்திய அணி விளையாடும்.

இந்நிலையில், நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி விளையாட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏசியன் கேம்ஸ் தொடருக்கு முன், செப்டம்பர் 22ஆம் தேதி, ஜப்பான் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான ஒரு போட்டியில் இந்திய அணி விளையாடும். இந்தியா, ஜப்பான் இடையிலான 75 ஆண்டுகால வலுவான நட்புறவை கொண்டாடுவதற்காக பிசிசிஐயும், ஜப்பான் தேசிய கிரிக்கெட் வாரியமும் இணைந்து முடிவு செய்துள்ளது.

இது வெறும் நட்பு ரீதியிலான போட்டி என்றாலும் ஐசிசி வரம்புக்குள் வரும். இந்நிலையில், இப்போட்டியில், இந்திய அணி வீரர்கள் சிலர் ஜப்பான் அணியில் இணைந்து விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் ஜப்பான் அணியில் இணைந்து விளையாட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

குறிப்பாக, ஜப்பான் வீரர்கள் எடுத்துக் கொண்ட குழு புகைப்படத்தில் சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரது புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது. இது தற்போது, தீயாக வைரலாகி வருகிறது. ஆனால், இது உண்மையில்லை. ஏஐ மூலம், சாம்சன் மற்றும் சூர்யவன்ஷி ஆகியோரது புகைப்படங்களை இணைத்துள்ளனர்.

இப்போட்டி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிசிசிஐ, ‘‘ஜப்பான் தேசிய கிரிக்கெட் அகடமியும், பிசிசிஐயும் இணைந்து, இந்தியா, ஜப்பானின் 75 ஆண்டு கால, வலுவான உறவை கொண்டாடும் வகையில், கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த ஒரு போட்டி கொண்ட டி20 தொடருக்கு, சுசூகி கப் என பெயர் வைத்துள்ளோம். இப்போட்டி, ஜப்பானில் உள்ள சனோ தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்’’ எனக் கூறினார்.

இந்தியா, ஜப்பான் ஆகிய அணிகள், சர்வதேச கிரிக்கெட்டில் மோத உள்ளது இதுதான் முதல் முறை. அதுவும், ஜப்பான் அணிக்கு எதிராக, இந்திய மெய்ண் அணி களமிறங்க உள்ளது. அதாவது, ஏசியன் கேம்ஸ் தொடருக்கு சென்றுள்ள ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, இத்தொடரில் விளையாடும். திலக் வர்மா, வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் போன்ற அதிரடி வீரர்களும் இப்போட்டியில் விளையாட உள்ளதால், இப்போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.

இந்திய அணி பட்டியல்: ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணைக் கேப்டன்), அபிஷேக் சர்மா, ஷிவம் துபே, நிதிஷ் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஜஸ்பரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய்.

ரிசர்வ் வீரர்கள்: ரஷிக் சலாம், கார்த்திக் தியாகி, விக்கி ஒட்ஸ்வால்.

Source link