Suitable Business According To Numerology,எண் கணிதம்: உங்கள் பிறந்த தேதிக்கு ஏற்ற வேலை மற்றும் தொழிலைத் தேர்வு செய்வது எப்படி? – numerology and career choices: finding suitable jobs and businesses based on your birth date

எண் கணிதத்தின் படி ஒவ்வொருவருடைய பிறந்த தேதியின் அடிப்படையில் அவருடைய ஆளுமை, திறமை, அதற்கான வேலை, தொழில் போன்ற விஷயங்கள் அமையும். சிலர் தங்களுக்கு சாதகமற்ற சில தொழில், வேலைகளில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு. இது அவர்களுடைய வளர்ச்சியை தடுக்கும். எண் கணித பகுப்பாய்வின்படி ஒருவருக்கு எந்தவிதமான வேலை, தொழில் பொருத்தமாக இருக்கும் என தெரிந்து கொள்வோம்.

ஒருவர் தலைமைத்துவ பண்புகளில் சிறந்து விளங்குகிறாரா? படைப்பாற்றலில் மிளிறுகிறாரா? கல்வி, தொழில் நுட்பத்தில் உயர்வடைகிறாரா? இவையெல்லாம் அவருடைய பிறந்த தேதியின் அடிப்படையில் அமையக்கூடிய மூல எண்ணைப் பொறுத்து அமையக்கூடியது. அந்த விதத்தில் ஒருவருடைய பிறந்த தேதியின் அடிப்படையில் பொருத்தமான வேலை தொழில் என்னவென பார்ப்போம்.

எண்களும் தனித்துவ பண்புகளும்:

எண் கணிதத்தின் படி ஒருவர் பிறந்த தேதியின் அடிப்படையில் அவருடைய ஆளுமை, ஆர்வங்கள், அவர்கள் செய்ய நினைக்கும் வேலை, தொழில் உள்ளிட்ட விஷயங்கள் அமையும். 1 முதல் 9 வரையிலான ஒவ்வொரு எண்ணுக்கும் தனித்துவமான பண்புகள் உண்டு. அதன் அடிப்படையில், அந்த எண்களுக்குரிய கிரகங்களின் தாக்கம் இருக்கும். எந்த ஒரு எண்ணில் பிறந்தவர்களுக்கு, அவர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம் என்றும் எண் கணிதம் கூறுகிறது.

பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28

எண் கணிதத்தில், எண் ஒன்றில் பிறந்தவர்கள் (1, 10, 19, 28) சூரியனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாக குறிப்பிடப்படுகிறது. இவர்களுக்கு பிறவியிலேயே தலைமை பண்பும், தன்னம்பிக்கையும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் முடிவு எடுக்கும் திறன் வலுவாக இருக்கும். அதனால் எந்த விதமான கடினமான சூழ்நிலையிலும் தங்களுடைய தைரியமான அணுகுமுறை இவர்களுக்கு மேன்மையை தரக்கூடியதாக அமையும்.

மேலும் இந்த எண்ணில் பிறந்தவர்கள் தொழில் முனைவராக அல்லது மேலாண்மை துறைகளில் சிறந்து விளங்குவார்கள். வணிக நிர்வாகம், உயர்மட்டநிர்வாகத்தில் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.

பிறந்த தேதிகள்: 2, 11, 20, 29

சந்திர பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ‘2’ என்ற எண்ணில் பிறந்தவர்கள் கூட்டுத் தொழில், வேலைகளில் பிறருடன் இணைந்து செயல்படக்கூடிய குணம் கொண்டவர்கள். அனைவரிடமும் இணைந்து செயல்படும் குணம் கொண்டவர்களாக இருப்பதால் எந்தவித சூழலிலும் அனுசரித்து செல்லக்கூடியவர்கள்.

சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழில் அல்லது குழு பணிகளை திறம்பட செயல்படுவார்கள். இவர்களுக்கு கலைத்துறையிலும் மிகுந்த ஈடுபாடு இருக்கும். அதனால் நடிப்பு, ஆடை வடிவமைப்பு, ஊடக துறை, மக்கள் தொடர்பு, தூதரக பணி போன்ற விஷயங்களை இவர்களின் செயல்பாடு நல்ல விதத்தில் இருக்கும்.

பிறந்த தேதிகள்: 3, 12, 21, 30

குருவின் அருள் பெற்று எண் 3ல் பிறந்தவர்களிடம் திட்டமிடக்கூடிய திறனும் நிர்வாக திறனும் நிறைந்திருக்கும். இதன் காரணமாக பொறியியல் துறை, கணக்கீடு, ஆராய்ச்சி, திட்டமிடல், வங்கி நிர்வாகம், கல்வி, சில்லறை வணிகத்தில் மிகவும் சிறந்து விளங்குவார்கள்.

பிறந்த தேதிகள்: 4, 13, 22, 31

எண் கணிதத்தின்படி, ராகுவை அதிபதியாக கொண்ட எண் 4ல் பிறந்தவர்கள் எதிலும் வித்தியாசமாக சிந்திக்க கூடியவர்கள். இவர்கள் செய்யக்கூடிய எந்த ஒரு செயலிலும், வித்தியாசமான முயற்சிகள், கொண்டிருப்பார்கள். மரபுகளை உடைக்க விரும்பக் கூடியவர்கள்.
பல நேரங்களில் இது இவர்களுக்கு சாதகமாக இருந்தாலும், சில நேரங்களில் இவர்களுக்கு கெட்ட பெயரை பெற்று தரலாம். இவர்கள் தொழில் நுட்பம், ஆராய்ச்சியில், வடிவமைப்பு, சிக்கல்களை தீர்க்கக் கூடிய ஆக்கப்பூர்வமான திட்டமிடுவது, உளவாளி, எந்த ஒரு துறையில் இருந்தாலும் முடிவெடுப்பதற்கான சிறந்த நபர்களாக இருப்பார்கள்.

பிறந்த தேதிகள்: 5, 14, 23
பிறந்த தேதிகள்: 6, 15, 24

சுக்கிர பகவானின் அருள் கொண்ட எண் 6-ல் பிறந்த நண்பர்கள் மிகவும் கவர்ச்சிகரமான பேச்சு, ஆளுமை திறன் மற்றும் அழகில் உணர்வு கொண்டவர்கள். கலை சார்ந்த விஷயங்களில் பிறந்து விளங்குவார்கள். இதன் காரணமாக ஃபேஷன், அழகு சாதனத்துறை, வீட்டின் உட்புற வடிவமைப்பு, ஹோட்டல் துறை, உணவு தயாரிப்பது, விருந்தோம்பல் போன்ற விஷயம் துறையை சார்ந்தவர்களுக்கு ஏற்றம் தரக்கூடியதாக இருக்கும்.

பிறந்த தேதிகள்: 7, 16, 25

நவகிரகங்களின் கேதுவின் ஆதிக்கம் பெற்றது எண் 7-ஐக் கொண்டவர்கள், ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்களாகவும், புதிய விஷயங்களை அதிலும், ஆராய்ச்சி செய்வதிலும் ஆர்வம் கொண்டவர்கள். இதன் காரணமாக ஆராய்ச்சி துறை, தொழில்நுட்பம், கல்வி, தரவுகளை பகுப்பாய்வு செய்வது, எழுத்து துறைகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். ஆன்மிக விஷயங்களில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பிறந்த தேதிகள்: 8, 17, 26

சனி கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற எண் 8-ல் பிறந்தவர்கள் பொதுவாகவே கடின உழைப்பாளிகளாகவும், பொறுப்புணர்வும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு வெற்றி கிடைக்க தாமதம் ஏற்படலாம் இருப்பினும் அவர்கள் உயர்நிலை அடைவார்கள். இந்த நபர்கள் அரசியல், நிர்வாகம், நீதித்துறை, ரியல் எஸ்டேட் துறை, மேலாண்மை போன்ற துறைகளை பரிசீலிப்பது நல்லது.

பிறந்த தேதிகள்: 9, 18, 27

செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் நிறைந்த எண் 9-ல் பிறந்த நண்பர்கள் மிகவும் தைரியமான, ஆற்றல் நிறைந்த நபர்களாக இருப்பார்கள். எந்த ஒரு வேலையும் சுறுசுறுப்புடன் வேகமாக செய்து முடிக்க நினைக்கக் கூடியவர்கள். சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கும் இவர்கள், பாதுகாப்புத்துறை, விளையாட்டுத்துறை, பொறியியல் துறை, ரியல் எஸ்டேட், செயல்பாட்டு மேலாண்மை போன்ற துறைகளில் இவர்கள் மிகவும் சிறந்து விளங்க கூடியவர்கள்.
இவர்களின் வேகத்தை, ஆற்றலை சரியான விதத்தில் பயன்படுத்த முயலவும்.

Source link