பெங்களூரு டூ மும்பை: ஸ்பீடு பிளஸ் கனெக்டிவிட்டி- வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் தரும் 5 வசதிகள் – speed and connectivity features of bengaluru to mumbai vande bharat sleeper express from november 1

வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பெங்களூருவில் இருந்து மும்பை வரை செல்லும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தொடங்கி வைக்கப்படுகிறது. இது நாட்டின் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக நகரை இணைக்கும் முக்கிய சேவையாக பார்க்கப்படுகிறது. இதில் ஸ்பீடு, கனெக்டிவிட்டி ஆங்கிளில் கிடைக்கும் வசதிகளை பார்த்து விடலாம்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வந்த பிறகு இந்திய ரயில் போக்குவரத்தின் வேகம் ஒருபடி முன்னே சென்றிருக்கிறது. சர்வதேச தரத்தில் புதிய தொழில்நுட்பங்கள் உடன் அதிவேகமாக செல்லும் ரயில்களில் பயணிப்பது பலருக்கும் இனிமையான அனுபவமாக மாற தொடங்கியுள்ளது. முதலில் பகல் நேரத்தில் மட்டும் இயக்கப்படும் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இரவில் பயணிக்கும் ஸ்லீப்பர் ரயில்கள் வந்துவிட்டன.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் அறிமுகம்

முதல் ரயில் ஹௌரா – கமக்யா இடையில் இயக்கப்படும் சூழலில் அடுத்த வழித்தடம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பெங்களூரு – மும்பை (27651/ 27652) இடையில் 1,095 கிலோமீட்டர் தூரத்திற்கு 15 மணி நேரம் 45 நிமிடங்களில் கடக்கும் வகையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் புதுமுயற்சி-மினி ஏசி பஸ் திட்டம்!

இது தென்னிந்தியாவிற்கு முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் என்பது கவனிக்கத்தக்கது. அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் வரை சீறிப் பாயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மூலம் ஸ்பீடு மற்றும் கனெக்டிவிட்டி வகையில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று விரிவாக பார்க்கலாம்.

பெங்களூரு டூ மும்பை ரயில்- கவனம் ஈர்க்கும் ஸ்பீடு அம்சங்கள்

மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்வதால் பாரம்பரிய ஐ.சி.எஃப், எல்.ஹெச்.பி பெட்டிகளின் தரத்தை காட்டிலும் சிறப்பானதாக இருக்கும். வழக்கமாக 1,100 கி.மீ தூரத்தை கடக்க எக்ஸ்பிரஸ் ரயில்கள் 21 முதல் 24 மணி நேரம் வரை எடுத்து கொள்கின்றன. ஆனால் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் அதிகபட்சம் 16 மணி நேரத்தில் சென்றுவிடும். ரயிலின் முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டு எஞ்சின்களை கொண்டிருப்பதால் ரிவர்ஸ் எடுக்கும் கால தாமதம் தவிர்க்கப்படும். இதனால் 20 முதல் 30 நிமிடங்கள் விரைந்து செல்ல உதவும். விமானப் பயணத்தில் செக்யூரிட்டி ஸ்கிரீனிங், லக்கேஜ் வெயிட்டிங், நகர்ப்புற போக்குவரத்து நெரிசல், ஏர்போர்ட்டில் காத்திருப்பு என இரண்டு விமான நிலையங்களிலும் சேர்த்து ஏற்படும் கால தாமதம் வந்தே பாரத் ஸ்லீப்பர் பயணத்தில் இரவு நேர 16 மணி நேர பயணத்தில் ஈடுகட்டப்படும். சில சமயங்களில் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் விரைந்து செல்லவும் உதவலாம். எக்ஸ்பிரஸ் போன்று அதிவேகமாக பயணித்தாலும், வழக்கமான ரயில் நிலையங்களில் நின்று செல்லாது. தவிர்க்க இயலாத முக்கியமான ஸ்டேஷன்களில் மட்டும் நிற்கும். இதன்மூலம் நீண்ட தூரத்திற்கு சராசரி வேகத்தில் பயணிக்க முடியும்.

மும்பை டூ பெங்களூரு ரயில்- கனெக்டிவிட்டியில் கிடைக்கும் பலன்கள்

பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டு, எலக்ட்ரானிக் சிட்டி போன்ற ஐடி காரிடாரை மும்பையில் உள்ள பேங்கிங், கார்ப்பரேட் மையங்கள் உடன் இணைக்க உதவுகிறது. பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலானது ஹூப்ளி – தர்வாத், பெலகாவி, புனே, தானே ஆகிய தொழில் மண்டலப் பகுதிகள் வழியே பயணிப்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. பெங்களூரு KSR ஸ்டேஷன், மும்பை ஜங்ஷன் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து மெட்ரோ ரயில் இணைப்பு சேவை இருப்பதால் பயணிகள் எளிதாக நகரின் எந்த ஒரு பகுதிக்கும் எளிதாக செல்ல முடியும். மழை காலங்கள், விமான டிக்கெட் கட்டணம் அதிகமாக விற்கப்படும் காலகட்டங்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெரிதும் உதவும். கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான வசதிகளை நிர்வகித்து வரும் தொழில் முனைவோர், தொழிலதிபர்கள், வல்லுநர்கள் உள்ளிட்டோருக்கு விரைவான போக்குவரத்து சேவையை உறுதி செய்ய முடியும்.

Source link