நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில், 226 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணி, 19.4ஆவது ஓவரின் முடிவில், 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
பேட்டிங் வரிசை மாற்றம்: வழக்கமாக, மூன்றாவது இடத்தில் ஆடும் இஷான் கிஷன், முதல் போட்டியில் 5ஆவது இடத்தில் ஆடினார். திலக் வர்மாவுக்கு ஒன்டவுன் இடம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், இதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. இஷான் கிஷனுக்கு, இடுப்பு பகுதியில் லேசான தசை பிடிப்பு பிரச்சினை இருந்ததால்தான், அவரை ஒன்டவுன் இடத்தில் களமிறக்கவில்லையாம். இந்த பிரச்சினையோடு விளையாடிய இஷான் கிஷனுக்கு, தசைபிடிப்பு அதிகமானதால், இரண்டாவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பிசிசிஐ கடும் அதிருப்தி: இந்நிலையில், இந்த விவகாரத்தில், பிசிசிஐ கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிட்னஸ் இல்லாத வீரரை எப்படி, பிளேயிங் 11-ல் சேர்த்தீர்கள் எனக் கேட்டு, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரையும், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரையும், பிசிசிஐ நிர்வாகிகள் திட்டித்தீர்த்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, இந்திய அணியில், சில வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், காயம் காரணமாக அவதிப்படுகிறார் எனத் தெரிந்தே ஏன் அணியில் சேர்த்தீர்கள் என்பதுதான் பிசிசிஐயின் கோபத்திற்கு காரணம். இதுகுறித்து, இருவரும் விளக்கம் கொடுக்க வேண்டும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளதாம்.
கிஷனுக்கு மாற்று: இந்திய அணியில் முழுநேர பேட்டர்களில், பேக்கப் வீரராக இருப்பது வைபவ் சூர்யவன்ஷி மட்டுமே. இதனால், இஷான் கிஷனுக்கு மாற்றாக, 2ஆவது போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவது உறுதியாகியுள்ளது.
எந்த இடம்? சூர்யவன்ஷிக்கு, பிளேயிங் 11-ல் எந்த இடம் கிடைக்கும் என்பது தான் தற்போது, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் டி20 போட்டியில், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடர்ச்சியாக 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியதால்தான், இந்திய அணி, பவர் பிளேவில் 94 ரன்களை குவித்தது. இதனால்தான், 226 ரன்கள் இலக்கை துரத்தி வெல்ல முடிந்தது. இதனால், ஓபனிங் காம்பினேஷனை மாற்றுவது சரியான முடிவாக இருக்காது. இதனால், இஷான் கிஷனின் மூன்றாவது இடத்தில்தான், சூர்யவன்ஷி விளையாட வாய்ப்புள்ளது.
வைபவ் சூர்யவன்ஷி, இதற்குமுன் ஒன்டவுன் இடத்தில் ஆடியது கிடையாது. இதுவரை, மொத்தம் 8 டி20ஐ போட்டிகளில் விளையாடி, அதில் 186.36 ஸ்ட்ரைக் ரேட்டில் 246 ரன்களை அடித்துள்ளார். தற்போது, சூர்யவன்ஷிக்கு ஒன்டவுன் எனும் புது அனுபவம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதிலும் அவர் சிறப்பாக செயல்பட்டால்தான், சூர்யவன்ஷியால், அனைத்து இடங்களிலும் பழக்கப்படுத்திக் கொண்டு சிறப்பாக ஆட முடியும் என்ற நம்பிக்கையை பெற முடியும்.
இதனால், 2ஆவது போட்டியில், சூர்யவன்ஷி மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா, நியூசிலாந்து இடையிலான 2ஆவது டி20 போட்டி, அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்திய அணி, இதுவரை 4 முறை நியூசிலாந்து சென்று டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், நான்கு முறையும் இந்திய அணிதான் தொடரை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
