Kendra Drishti Yoga October 30,அக்டோபர் 30-ல் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: புதன், செவ்வாயின் சாதகமான தாக்கங்களைப் பெற வாய்ப்புள்ள ராசிகள் – kendra drishti yoga on 30 october 2026: zodiac signs that may benefit from mercury and mars

கேந்திர திருஷ்டி யோகம்
புதன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் இடையே அக்டோபர் 30ஆம் தேதி கேந்திர திருஷ்டி யோகம் உருவாகிறது. இதன் காரணமாக இந்த இரண்டு கிரகங்களின் அருளால் சில ராசிகளுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. யாருக்கெல்லாம் நன்மை அதிகரிக்கும் என தெரிந்து கொள்வோம்.

புதன்-செவ்வாய் சேர்க்கை 2026
ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்களின் சேர்க்கை மட்டும் அல்லாமல் அவை அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து சில யோகங்கள் உருவாகின்றன. அந்த விதத்தில் வரும் 30 ஆம் தேதி செவ்வாய் மற்றும் புதன் இடையே 90 டிகிரி கோணத்தில் அமைகின்றன. இந்த யோகத்தின் காரணமாக சில ராசிகளுக்கு புதன் மற்றும் செவ்வாய் ஆகியகிரகங்களின் யோக பலன்களை பெற உள்ளனர். இதன் காரணமாக அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் வளம் சேர்க்கக் கூடிய சூழல் ஏற்பட உள்ளது. இந்த யோக பலனானது அக்டோபர் 30 முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை நல்ல பலன் தரக்கூடியதாக அமையும்.

மேஷ ராசி

மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த புதன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் அமைப்பு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. உங்களுடைய நிதிநிலை குறிப்பிடத்தக்க விதத்தில் முன்னேற்றம் அடைவதை காண்பீர்கள். நாங்கள் செய்யக்கூடிய பணிகள் அனைத்திலும் எதிர்பார்த்த வெற்றியும், பாராட்டுகளும் கிடைக்கலாம். நீண்ட காலமாக நீங்கள் முடிக்க முடியாமல் இருந்த பணிகளை, தற்பொழுது நீங்கள் எடுக்கக் கூடிய முயற்சிகளால் முடிக்க முடியாது.

​உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். உங்களுடைய விருப்பமான வேலை அல்லது தொழில் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இந்த காலத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

மிதுன ராசி

மிதுன ராசி நண்பர்களுக்கு உருவாக்கக்கூடிய கேந்திர திருஷ்டி யோகம் மங்களகரமான பலனை தரக்கூடியதாக அமையும். ஊடகத்துறை, சந்தைப்படுத்துதல், ஐடி துறை, வங்கி துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்தையும், பெரிய வெற்றியை பெற வாய்ப்புகள் உண்டு.
இந்த காலகட்டத்தில் உங்களுடைய ஊதியம் உயரும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்து நல்ல வேலை வாய்ப்பு அமையும். குடும்பத்திலும் பணி இடத்திலும் மதிப்பும் மரியாதை வெகுவாக உயர்வதை காண்பீர்கள். புதிய வண்டி, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு.

கன்னி ராசி

புதன் மற்றும் செவ்வாய் இடையே உருவாகக்கூடிய கேந்திர திருஷ்டி யோகம், கன்னி ராசிகளுக்கு அற்புதமான பலனை தரக்கூடியதாக இருக்கும். நீண்ட கால பதவி உயர்வுக்காக காத்திருக்கக்கூடிய நண்பர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

இந்த யோகத்தின் அருள் நமக்காக வருமானத்தை உயர்த்துவதற்கான புதிய வழிகளை கண்டுபிடிப்பீர்கள். உத்யோகம் செய்யக்கூடியவர்களுக்கு ஊதிய உயர்வு, பல மங்களகரமான பலன்களை நீங்கள் பெற வாய்ப்புகள் உண்டு. முன்னர் நீங்கள் செய்த முதலீடுகள் லாபத்தை தரக்கூடியதாக அமையும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு வரப்பிரசாதமான காலமாக அமையும். புதன் மற்றும் செவ்வாய் இடையே உருவாகும் யோகம் உங்களுக்கு மன உறுதியையும், சேவைகளை செய்து முடிக்கக்கூடிய தைரியத்தை தரும். பணியிட சூழ்நிலை சாதகமாக அமைவது காண்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு, வேலை தொடர்பான கௌரவம் அதிகரிக்கும்.
நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறுவதை காண்பீர்கள். உங்கள் குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். பயணிகளின் மூலம் லாபத்தை பெறவும், தொழில் வணிகம் செய்யக்கூடியவர்கள் நல்ல வாய்ப்புகளை பெறவும் அதற்கான காலமாக அமையும். ஒட்டு மொத்தத்தில் இந்த கிரகநிலை மற்றும் காலகட்டம் மகிழ்ச்சிகரமான அமைப்பை ஏற்படுத்தும்.

மகர ராசி

மகர ராசி நண்பர்களுக்கு புதன் மற்றும் செவ்வாயின் அமைப்பால் உருவாக்கும் கேந்திர திருஷ்டி யோகம் பல நல்ல வாய்ப்புகளை தரும். தொழில், வர்த்தகம் செய்யக்கூடியவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கைகூடி வரும். உங்களுடைய தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்க கூடிய காலம். பழைய முதலீடுகள் மூலம் நிதி ஆதாயம் அடைவீர்கள்.
பணியிடத்தில் உங்களுடைய மேலதிகாரிகளின் ஆதரவையும், முடிக்கப்படாமல் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும். வருமானத்தை அதிகரிப்பதற்காக நீங்கள் எடுக்கக்கூடிய பல்வேறு முயற்சிகள் சாதக பலன்களை தரக்கூடியதாக அமையும்.

Source link