IND vs WI ODI – இந்திய அணி அறிவிப்பு? க்ருணால் உட்பட, புறக்கணிக்கப்பட்ட 4 பேருக்கு வாய்ப்பு – india team likely squad for west indies odi series 2026

இந்தியா வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இத்தொடருக்கான முதல் போட்டி, வரும் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறும். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 30, அக்டோபர் 3 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில், ஏசியன் கேம்ஸ் தொடரில் ஆடவர் கிரிக்கெட் தொடரும் நடைபெறவுள்ளுத. செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3ஆம் தேதிவரை இத்தொடர் நடைபெறும்.

இதனால், ஏசியன் கேம்ஸ் தொடரில் இடம்பெற்றுள்ள ஷ்ரேயஸ் ஐயர், திலக் வர்மா, நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பரீத் பும்ரா, ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், அக்சர் படேல் போன்றவர்களால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாது.

4 சீனியர்களுக்கு வாய்ப்பு: இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு, க்ருணால் பாண்டியா, ராஜத் படிதர், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோரை சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. குறிப்பாக, இந்த 4 பேருக்கும் பிளேயிங் 11-லும் வாய்ப்பு வழங்கப்படுமாம். இதில், அபாரமாக செயல்பட்டு, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வீரருக்கு, ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடர் வரை வாய்ப்பு கொடுக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. குறிப்பாக, க்ருணால் பாண்டியா மீதுதான் பிசிசிஐயின் கண் இருக்கிறதாம்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி குறித்து தற்போது பார்க்கலாம்.

பேட்டர்கள் இடம்: கேப்டன் ஷுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல், ராஜத் படிதர் ஆகிய பேட்டர்களுக்கு இடம் கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. குறிப்பாக, ராஜத் படிதருக்கு பிளேயிங் 11-ல் 4ஆவது இடத்தை கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.

ஆல்ரவுண்டர்கள் இடம்: ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, மனவ் சுதார், க்ருணால் பாண்டியா ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது.

பௌலர்கள்: முழுநேர பௌலர்கள் இடங்களில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய உத்தேச அணி (மேற்கிந்தியத் தீவுகள் தொடர்) – ஷுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ரோஹித் சர்மா, யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல், க்ருணால் பாண்டியா, ராஜத் படிதர், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, பிரின்ஸ் யாதவ், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, மனவ் சுதார்.

இத்தொடர் முடிந்ததும், இரு அணிகளுக்கு இடையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான முதல் போட்டி, அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும். இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த போட்டிகள் அக்டோபர் 9, 11, 14, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஒருநாள் தொடர் மீதுதான் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அடுத்த வருடம், ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால், தற்போது இருந்தே அதற்கான அணி பட்டியலை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது. இத்தொடரில், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடித்தால், அவர்களது இடம், உடனே உறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

Source link